ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி முடிவு!

0
ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - அரசு அதிரடி முடிவு!
ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - அரசு அதிரடி முடிவு!
ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி முடிவு!

இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் வரும் ஜூலை 10ம் தேதி வரை நகர்ப்புற பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் எரிபொருட்களை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு

நாடு தழுவிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற முக்கிய நகரங்களிலும் உள்ள பள்ளிகளும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஜூலை மாதம் 10ம் தேதி வரை இலங்கையில் உள்ள அனைத்து நகர்ப்புற பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் எரிபொருட்கள் அளிக்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் சமையல் எரிவாயு விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு விலை குறைப்பு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தவிர இலங்கையில் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் PM கிசான் திட்டத்தில் ரூ.2000 தவணைப்பணம் – புதிய வழிமுறை அறிமுகம்!

இதற்கு முன்னதாக இலங்கையில் மின்சாரப் பற்றாக்குறை காரணமாக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தவிர, அத்தியாவசிய சேவைகளுக்காக இயங்கும் அரசு அலுவலகங்கள் மட்டும் வாரத்தில் 4 நாட்களுக்கு செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த வகையில் வெள்ளிக்கிழமைகளில் அலுவலகங்கள் மூடப்பட்டு ஊழியர்கள் அனைவரும் விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!