தமிழகத்தில் பக்ரீத் திருநாளிற்கு அடுத்தும் (ஜூலை 11) விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் பக்ரீத் திருநாளிற்கு அடுத்தும் (ஜூலை 11) விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் பக்ரீத் திருநாளிற்கு அடுத்தும் (ஜூலை 11) விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் பக்ரீத் திருநாளிற்கு அடுத்தும் (ஜூலை 11) விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!

உலகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 10) இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பொது மக்களுக்கு உதவும் வகையில் பண்டிகைக்கு அடுத்த நாள் பொதுவிடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் ஜூலை 11ம் தேதியும் விடுமுறை விடப்படுமா? என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பொது விடுமுறை:

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று பக்ரீத். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் என்றும் ஈகை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படிக்கைக்கு பின் சிறந்த வரலாறு உண்டு. அதாவது இறைத்தூதராக நம்பப்படுபவர் இப்ராஹிம். இவர் பல ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது மனைவி மூலமாக ஆண் குழந்தை ஒன்றுக்கு தந்தையானார். அவனுக்கு இப்ராகிம், இஸ்மாயில் என பெயரிட்டு வளர்த்து வந்தார். அவன் பால்ய பருவத்தை அடைந்தவுடன் இப்ராஹிமின் கனவில் வந்த இறைவன் இஸ்மாயீலை தனக்கு பலியிடுமாறு கூறினார்.

Exams Daily Mobile App Download

இந்த கட்டளையை ஏற்று இப்ராஹிம் தனது மகனின் அனுமதியுடன் பலியிட ஆயத்தமானார் அப்போது இறைவன் ஜிஃப்ரயீல் என்ற வான தூதரை அனுப்பி இஸ்மாயீலை பலியிடுவதை நிறுத்தி அங்கிருந்த ஆடு ஒன்றை பலியிட உத்தரவிட்டார். இந்த தியாகத்தை நினைவு கூறவே ஆண்டுதோறும் இஸ்லாமியர்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய துல் ஹஜ் மாதம் பத்தாம் நாள் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இத்தினத்தன்று புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை மேற்கொள்வார்கள். நடப்பாண்டு ஜூலை 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

மத்திய அரசுப் பள்ளிகளில் 1,616 காலியிடங்கள் – ரூ.2,09,200 வரை சம்பளம்! ஜூலை 22 கடைசி நாள்!

இப்பண்டிகையை முன்னிட்டு மக்கள் வெளி ஊர்களுக்கும் தனது சொந்த ஊர்களுக்கும் சென்று குடும்பத்தாருடன் கொண்டாடுவார்கள் அதனால் வெளியூர்களுக்கு செல்பவர்கள் மாணவர்கள் போன்றோர் சிரமமின்றி மீண்டும் பணிக்கு திரும்பும் வகையில் பண்டிகைக்கு மறுநாள் 11ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி முதல்வருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here