அனைத்து பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 4 முதல் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

0
அனைத்து பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 4 முதல் விடுமுறை - முக்கிய அறிவிப்பு!
அனைத்து பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 4 முதல் விடுமுறை - முக்கிய அறிவிப்பு!
அனைத்து பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 4 முதல் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 4ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.

கோடை விடுமுறை

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மஹாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதம் முதல் பள்ளிகள் முழுவதுமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 4ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஜம்மு பிரிவின் குளிர்கால மண்டலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 4 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, அடுத்த வாரம் முதல் 1 லிருந்து 12 வரையுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் கோடை விடுமுறைகள் துவங்க இருக்கிறது. இப்போது காஷ்மீரில் நிலவும் வெப்பச் சலனத்தை கருத்தில் கொண்டு ஜூலை 4 முதல் கோடை விடுமுறையை அறிவிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

110 நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா தொற்று – WHO எச்சரிக்கை!

இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள பட்டப்படிப்பு கல்லூரிகளுக்கும் 21 நாட்கள் கோடை விடுமுறையை அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த வகையில், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜூன் 10ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. இது குறித்த அரசாங்க உத்தரவின்படி, கோடை மண்டலத்தின் ஜம்மு பிரிவின் கீழ் வரும் அனைத்து அரசு பட்டப்படிப்பு கல்லூரிகள் கூடுதலாக இரண்டு நாட்களையும் சேர்த்து ஜூன் 10 முதல் 30 வரை கோடை விடுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!