மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிப்பு – பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு!

0
மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிப்பு - பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு!
மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிப்பு - பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு!
மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிப்பு – பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு!

புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று (பிப்.7) ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளித்து மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு

கொரோனா 3ம் அலைத்தொற்றுக்கு மத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கடந்த ஜனவரி 24ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மீண்டும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு இன்று (பிப்.7) ஒரு நாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அச்சத்தில் பொதுமக்கள்! அரசின் முடிவு என்ன?

தற்போது 92 வயதான பாடகி லதா மங்கேஷ்கர் சினிமா உலகில் 13 வயதில் பாட ஆரம்பித்து சுமார் 80 ஆண்டுகாலமாக பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார். இவர் சினிமா உலகிற்கு அளித்த பங்களிப்பிற்காக தேசிய விருது, பாரத ரத்னா, ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை வழங்கி திரையுலகம் இவரை கவுரவித்துள்ளது. இப்படி இருக்க சமீபத்தில் உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் நேற்று (பிப்.6) காலமானார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவில் இன்று (பிப்.7) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் பிப்ரவரி 6, 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிதாபமாக காலமானார். அவரது மறைவு இசை மற்றும் கலை உலகிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த பாடகருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மகாராஷ்டிரா அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி பிப்ரவரி 7 ஆம் தேதி திங்கட்கிழமை மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொது விடுமுறையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களும் இன்று மூடப்படும்.

அதே நேரத்தில் அரசுப் பத்திரங்கள், அந்நியச் செலாவணி, பணச் சந்தைகள் மற்றும் ரூபாய் வட்டி விகித வழித்தோன்றல்கள் ஆகியவற்றில் பரிவர்த்தனைகள் மற்றும் தீர்வுகள் எதுவும் இருக்காது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிலுவையில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளின் தீர்வும் அடுத்த வேலை நாளுக்கு அதாவது பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவை முன்னிட்டு அனைத்து நீதித்துறை நடவடிக்கைகளையும் மும்பை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இனி அஞ்சலியாக களமிறங்கும் நடிகை – ரசிகர்கள் ஷாக்!

இதற்கிடையில் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதிச் சடங்குகள் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நேற்று (பிப்.6) மாலை 6:30 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இந்த இறுதி சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோருடன் பல்வேறு அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதற்கு முன்னதாக, லதா மங்கேஷ்கரின் நினைவாக 2 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!