அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இன்று முதல் ஜூலை 26 வரை விடுமுறை? முக்கிய உத்தரவு!

0
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இன்று முதல் ஜூலை 26 வரை விடுமுறை? முக்கிய உத்தரவு!
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இன்று முதல் ஜூலை 26 வரை விடுமுறை? முக்கிய உத்தரவு!
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இன்று முதல் ஜூலை 26 வரை விடுமுறை? முக்கிய உத்தரவு!

நாடு முழுவதிலும் இருந்து 4 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கக் கூடிய ‘கன்வார் யாத்திரை’ கடந்த 14ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளார்.

தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை:

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சவான் இந்து மாதத்தில் கன்வார் யாத்திரை எனப்படும் காவடி யாத்திரை 15 நாட்கள் நடைபெறும். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் யாத்திரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டுக்கான கன்வார் யாத்திரை கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் ஹரித்துவாரில் குவிந்து வருகின்றனர். சமீப காலமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள போதிலும், புதிய கட்டுப்பாடுகள் எதுவுமின்றி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த யாத்திரையின் பொழுது யாத்ரீகர்கள் ஹரித்வார், கௌமுக் மற்றும் உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி மற்றும் பீகாரில் உள்ள சுல்தாங்கஞ்ச் போன்ற பகுதிகளுக்கு கங்கை நதியின் புனித நீரை எடுத்து செல்வது வழக்கம். பின்னர், இந்த நீரை வைத்து சிவபெருமானை வழிபடுகின்றனர். ஏற்கனவே இந்த யாத்திரையின் போது வாள்கள், திரிசூலங்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது என உத்தரகாண்ட் மாநிலத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதையும் மீறி இது போன்ற பொருட்களை கொண்டு வந்தால் எல்லையிலேயே அனைத்து பொருட்களும் கைப்பற்றப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு ‘ரெட்’ அலர்ட் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த யாத்திரை இந்த ஆண்டு நடைபெற இருப்பதால் 5 கோடிக்கும் அதிகமான யாத்ரீகர்கள் கன்வர் யாத்திரையில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 15 நாட்கள் இந்த யாத்திரை நடைபெற இருப்பதால் ஹரித்வார் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை இன்று (ஜூலை 20) முதல் ஜூலை 26ஆம் தேதி வரை மூட ஹரித்வார் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து கன்வர் யாத்திரைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் , பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். யாத்திரை பாதை முழுவதும் சிசிடிவி கேமராக்கள், டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்பட உள்ளன. இதை தொடர்ந்து ஹரித்வாரில் கன்வார் யாத்திரை செல்லும் புனிதப் பாதையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்று ஹரித்வார் டிஎம் வினய் சங்கர் பாண்டே தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here