தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுக்கான விடுமுறை முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பள்ளிக்கல்வித்துறை அதில் மாற்றத்தை அறிவித்துள்ளது.

காலாண்டு விடுமுறை:

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாடுகளை நீக்கும் வகையில், அரசு பல புதிய திட்டங்களை செய்துள்ளது. அதன்படி, 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு அடிப்படை கல்வி அறிவான எண்கள் மற்றும் எழுத்துக்களின் அறிவை வளர்க்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தற்போது காலாண்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. காலாண்டு தேர்வுகளை அனைத்து பள்ளிகளும் செப்டம்பர் 30ம் தேதிகுள் நடத்தி முடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. தேர்வுக்கு பிறகு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.1ம் தேதி முதல் 6ம் தேதி வரையிலும், 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அக் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக பள்ளிகளுக்கு இன்று அறிவிக்கப்பட்ட விடுமுறை? – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

ஆனால், தற்போது பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக பள்ளிகளில் 1முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்விற்கு பிறகு அக்டோபர் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்க இருப்பதால் தான் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!