மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை நீட்டிப்பு? அரசு இன்று முக்கிய முடிவு!

0
மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை நீட்டிப்பு? அரசு இன்று முக்கிய முடிவு!
மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை நீட்டிப்பு? அரசு இன்று முக்கிய முடிவு!
மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை நீட்டிப்பு? அரசு இன்று முக்கிய முடிவு!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவது தொடர்பாக ஏற்பட்ட மோதல்களை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இப்போது இந்த நடவடிக்கை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று (பிப்.10) மாலைக்குள் முடிவு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பள்ளிகள் மூடல்

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக போராட்டமும், வன்முறையும் தீவிரமடைந்து இருக்கிறது. அதாவது, கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் வகுப்பறைக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்க, மற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இடையே போராட்டம் வெடித்து தற்போது கலவரமாக மாறி இருக்கிறது.

ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியல் & கட்டுப்பாடுகள் – ஒரு அலசல்!

இப்போது மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டுவதற்காக நேற்று (பிப்.9) முதல் அடுத்த 3 நாட்களுக்கு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஹிஜாப் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், தீர்ப்பு வழங்கும் வரைக்கும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசு எந்த முடிவும் எடுக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘கர்நாடகா மாநிலத்தின் கல்வி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சருடனான சந்திப்பை தொடர்ந்து இன்று (பிப்.10) மாலைக்குள் பள்ளிகள், கல்லூரிகளை தொடர்ந்து மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் கர்நாடகாவின் அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இன்னும் சில காலம் மூடுவது குறித்து இன்று (பிப்.10) மாலை முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஏலத்தில் டாப் 4 வீரர்கள்!

இப்போது ஹிஜாப் தொடர்பான வழக்கை கர்நாடகா உயர் நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் இருந்து மாற்றுவதற்காக தொடரப்பட்ட மனுவை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், விசாரணையைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here