தமிழகத்தில் நாளை (பிப்.22ம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை? கல்வித்துறை விளக்கம்!

0
தமிழகத்தில் நாளை (பிப்.22ம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை? கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் நாளை (பிப்.22ம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை? கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் நாளை (பிப்.22ம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை? கல்வித்துறை விளக்கம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பிப்.22ம் தேதியன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் விடுமுறை

தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 19ம் தேதி ஒரு நாள் மட்டும் அனைத்து அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதே போல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வாக்கு மையங்களாக செயல்பட்டதை முன்னிட்டு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பிப்.19 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

லட்சுமியின் அப்பா யார் என்ற உண்மையை சொன்ன பாரதி, கலங்கிய கண்ணம்மா – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வாக்கு மையங்களாக செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 22ம் தேதியன்று முழுமையாக செயல்படுமா அல்லது விடுமுறை விடப்படுமா என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. இந்த சந்தேகங்களுக்கு பதில் அளித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பரிசாக ரூ.10,000 முன் பணம்? முழு விவரம் இதோ!

அதாவது, ‘தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 99% வாக்கு மையங்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நாளை (பிப்.22) வாக்குப்பதிவு நடைபெறும் 5 வார்டுகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here