மராத்தியர்களின் வரலாறு

0

மராத்தியர்களின் வரலாறு

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும் 

இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்-கிளிக் செய்யவும்

மராத்தியர்கள்:

 • மராத்தியர்கள் தக்காணம் மற்றும் மகாராஷ்டிரா வின் மலைப்பகுதிகளில் வாழ்ந்தனர்.
 • முறைசாரா போர்முறை என்ற கொரில்லா போர் முறை யை மராத்தியர்கள் அறிந்திருந்தனர்.
 • ஒரு வலிமையான தேசம் மற்றும் கடவுள் பக்தி உணர்வை தோற்றுவித்தவர்கள், துக்காராம், ராமதாஸ், ஏக்நாத், வாமன் பண்டித் என்பவர்கள்.

சிவாஜி ( காலம் – கி.பி.1627- கி.பி.1680)

 • சிவாஜி புனே அருகிலுள்ள சிவனேரி கோட்டையில் ஷாஜிபான்ஸ்லே மற்றும் ஜிஜிபாய் என்பவருக்கு பிறந்தார்.

சிவாஜியின் படையெடுப்புகள்:

 • முஸ்லிம்களின் கீழ் பணியாற்ற வெறுப்புக் கொண்ட சிவாஜி, புரந்தர், ரெய்கார், தோர்னா ஆகிய கோட்டைகளை கி.பி.1649 -ல் பிஜப்பூர்சுல்தானிடமிருந்து கைப்பற்றினார்.
 • கி.பி.1674 ம் ஆண்டு நிதி நெருக்கடியின் காரணமாக கர்நாடகா மீது போர் தொடுத்தார்.

நிர்வாகம்:

சிறந்த நிர்வாகியான சிவாஜி, நிர்வாகத்தில் 8 அமைச்சர்களை அமைத்தார் . இது அஷ்டப்பிரதான் என்றழைக்கப்பட்டது.

 • மந்திரி (காலமுறை அமைச்சர் )
 • சச்சிவா (உள்துறை அமைச்சர் )
 • அமத்தியா(நிதி அமைச்சர் )
 • பீஷ்வா(பிரதம அமைச்சர் )
 • பண்டிட்ராவ் (சமயத் தலைவர் )
 • நியாயதீஷ் (தலைமை நீதிபதி )
 • சேனாவதிபதி (ராணுவ அமைச்சர்)
 • சுமந்த் (வெளியுறவு அமைச்சர் ) 

வசூலிக்கப்பட்ட வரிகள்:                                        

 • சிவாஜி ஆட்சி காலத்தில் சவுத், சுங்கத்தீர்வை, தொழில்வரி, சர்தேசமுகி போன்ற வரிகள் வசூலிக்கப்பட்டன.

இராணுவ நிர்வாகம் :

 • இவரது இராணுவத்தில் காலட்படை, குதிரைப்படை, ஒட்டகப்படை, கப்பற்படை இருந்தன.

சிவாஜியின் வழித்தோன்றல்கள் :

 • சிவாஜியின் மூத்தமகன் சம்பாஜி ஆட்சி பொறுப்பேற்ற பின் ஓவ்ரங்கசீப் ஆல் பீஜப்பூர் கைப்பற்றப்பட்டது. சம்பாஜி, மற்றும் அவரது மகன் ஷாகு கைது செய்யப் பட்டனர். சம்பாஜி சிறையிலேயே கொல்லப்பட்டார்.
 • சிவாஜியின் மற்றொரு மகன் ராஜாராம் ஆட்சி பொறுப்பேற்றார். ராஜாராம் மறைவிற்கு பிறகு அவரது மகன் இரண்டாம் சிவாஜி ஆட்சி பொறுப்பேற்றார்.
 • ஒவ்ரங்கசீப் இறந்தபின் முதலாம் பகதுர்ஷா ஆட்சி பொறுப்பேற்றார். ஷாகு, முதலாம் பகதுர்ஷா வினால் விடுவிக்கப்பட்டார். ஷாகுவிற்கும் ராஜாராம் மனைவி தாராபாய் இடையே உள்ளூர் போர் ஏற்பட்டது. ஷாகு வெற்றி பெற்றார். இதற்கு பாலாஜி விஸ்வநாத் மூலகாரணமாக திகழ்ந்தார். எனவே அவரை பிரதம அமைச்சராக (பீஷ்வா) ஷாகு நியமனம் செய்தார்.

பீஷ்வாக்களின் ஆட்சி:

 • கி.பி.1713 ம் ஆண்டு பீஷ்வாக்களின் ஆட்சி தொடங்கியது.

பீஷ்வா (பாலாஜி விஸ்வநாத் )- (கி.பி.1713- கி.பி.1720)

 • சர்தேஷ்முகி ,சௌத் வரிகளை வசூல் செய்ய நிலமானிய பிரபுக்களை நியமனம் செய்தார்.இவர் கி.பி.1720 ம் ஆண்டு மரணமடைந்தார்.

பீஷ்வா பாஜிராவ் (1720-1740):

 • பாலாஜி விஸ்வநாத் மகன் பாஜிராவ் பீஷ்வாவாக பொறுப்பேற்றார். மராத்திய பேரரசை வடக்கு பகுதியில் விரிவுப்படுத்த விரும்பினார்.போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து தானா, பஸ்சின், சால்செட் போன்ற இடங்களை கைப்பற்றினார்.

பீஷ்வா பாலாஜி பாஜிராவ் (கி.பி.1740- கி.பி.1761):

 • இவர் மூன்றாவது பீஷ்வா ஆவார். பஞ்சாப்பை கைப்பற்றி அட்டாக் கோட்டையில் மராத்திய கொடியை பறக்க விட்டார். பின் அகமதுஷா அப்தாலியின் படையெடுப்பினால் மராத்தியப் பேரரசு சீர்குலைந்தது. இது மூன்றாம் பானிபட்போர் என்றழைக்கப்பட்டது.

மராத்தியப் பேரரசு சீர்குலையக் காரணம்:

 1. ஆக்கிரமப்புக்கொள்கை
 2. கொள்ளையடித்தல் கொள்கை
 3. இராஜப்புத்திரர்கள், ஜட்டுகள், சீக்கியர்கள் மராத்தியர்களை வெறுத்தனர்.
 4. இனத்தவர்களின் ஆதரவை இழந்தனர்.
 5. ராணுவத்தின் வலிமை குறைவு.

நாதிர்ஷா:

 • நாதிர்ஷா பாரசீகத்தில் தோன்றிய தலைசிறந்த வீரர். கி.பி.1739 ம் ஆண்டு இந்தியாவின் மீது படையெடுத்தார். காரணம் இந்தியாவின் இயற்கை வளத்தை கொள்ளையடித்து வெற்றி வீரனாக திகழ வேண்டும் என எண்ணினார்.

போரில் நிகழ்ந்த நிகழ்வுகள்:

 • இந்தியாவை முகமதுஷா ஆட்சி செய்து வந்தார். முகமதுஷா ஆப்கானியர்களுக்கு புகலிடம் அளிக்க கூடாது என்பதை மறுத்ததால், நாதிர்ஷா இந்தியா மீது போர் தொடுத்தார்.
 • பெஷாவரை கைப்பற்றி முகலாயர்களை கர்ணல் என்ற இடத்தில் எதிர்த்து போரிட்டார்.
 • முகலாய பேரரசர் டெல்லியில் தஞ்சம் புகுந்தார்
 • முகலாய பேரரசர் 20 கோடி ரூபாயை போர் இழப்பிட்டாக கொடுத்து தன்னை காப்பாற்றிக் கொண்டார்.
 • நாதிர்ஷா டெல்லியில் 15 நாட்கள் தங்கி சூறையாடினார்.
 • ஆயிரக்கணக்கோர் கொல்லப்பட்டனர். முகலாய மன்னரும் கொல்லப்பட்டார்.
 • நாதிர்ஷா 2 மாதங்களுக்கு பிறகு மாபெரும் பொருட்களான கோஹினுர் வைரம் மற்றும் மயிலாசனத்தையும் கொள்ளையடித்து தன் நாட்டிற்கு திரும்பினார். கி.பி.1747 ல் தனது படைவீரர்களால் கொல்லப்பட்டார்.
 • நாதிர்ஷா படையெடுப்பினால் மராத்தியர்கள், சீக்கியர்கள், ரோஹிலர்கள், ஜாட்டுகள் வளர்ச்சி அடைய வழிவகுத்தது. இந்தியாவின் செல்வவளம் சூறையாடப்பட்டது.

அகமதுஷா அப்தாலி படையெடுப்பு :

 • நாதிர்ஷாவைப் போன்று இந்தியாவின் செல்வ வளத்தை சூறையாட விரும்பினார், அகமதுஅப்தாலி.

அதனால் மராத்தியர்கள் மீது போர்த் தொடுத்து பஞ்சாபை கைப்பற்றி மதுரா, ஆக்ரா, இடங்களில் கொள்ளையடித்தார். இவரின் படையெடுப்பு மராத்திய மற்றும் முகலாயர்களின் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தியதால் ஆங்கிலயேர்கள் தங்களது இறையாண்மையை நிலைநாட்டினார்.

PDF பதிவிறக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!