வீட்டில் இருந்தே வேலை – 53 சதவீத ஊழியர்கள் ஆதரவு!!

0
வீட்டில் இருந்தே வேலை - 53 சதவீத ஊழியர்கள் ஆதரவு!!
வீட்டில் இருந்தே வேலை - 53 சதவீத ஊழியர்கள் ஆதரவு!!
வீட்டில் இருந்தே வேலை – 53 சதவீத ஊழியர்கள் ஆதரவு!!

நாட்டில் கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்த படியே (Work From Home) வேலை செய்து வந்தனர். தற்போது அதனை மீண்டும் செய்வதற்கு அதிக அளவிலான ஊழியர்கள் தங்களது ஆதரவு கருத்தை தெரிவித்துள்ளனர். இது கருத்து கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

வீட்டில் இருந்தே வேலை:

நாட்டில் கடந்த ஆண்டு அதிக அளவில் கொரோனா நோய்த்தொற்று பரவியது. இதன் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் எந்த துறையும் முறையாக இயங்கவில்லை. இதன் காரணமாக நாட்டில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்தது. இதனை சரி செய்வதற்காக அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு Work From Home என்னும் முறையை ஏற்படுத்தினர்.

TN Job “FB  Group” Join Now

இதன் மூலம் ஊழியர்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்த படியே தங்களது பணிகளை செய்து வந்தனர். இது பெரும்பாலானவர்களுக்கு மிக உதவிகரமாக இருந்தது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இந்த Work From Home மிக பயனுள்ளதாக இருந்தது என்று கூறப்படுகிறது. தற்போது நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இதனால் நாட்டில் மீண்டும் பொதுமுடக்கம் ஏற்பட்டு விடுமோ என்று அனைவரும் தொடர்ந்து அச்சம் கண்டு வருகின்றனர்.

பள்ளி, கல்லூரிகள் மூடல் & தியேட்டர்களில் கட்டுப்பாடுகள் – மாநில அரசு உத்தரவு!!

மேலும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மிக தீவிரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நாட்டில் மீண்டும் Work From Home ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து ஊழியர்களிடம் கருத்து கணிப்பும் நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் 53.4% பேர் Work From Home வேண்டும் என்று தங்களது ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் 46.6% பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அலுவலகத்தில் சென்று வேலை செய்வதை விட வீட்டில் இருந்து வேலை செய்வது சிறந்தது என்று அதிக அளவிலான ஊழியர்கள் கருதுகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here