தமிழகத்தில் சிறை பணியாளர்களுக்கு தடுப்பூசி – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் சிறை பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக கருதி உடனடியாக அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சிறை பணியாளர்களுக்கு தடுப்பூசி :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அரசு தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கொரோனா நோய் தொற்றிற்கு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தடுப்பூசிகளை தமிழக அரசு அனைவர்க்கும் இலவசமாக செலுத்தி வருகிறது. முன்களப் பணியாளர்களும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
மொத்தம் தமிழகம் முழுவதும் தமிழகம் முழுவதும் உள்ள 13 ஆயிரத்து 854 கைதிகள் உள்ளனர். சிறை கைதிகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தொடர்ந்து சிறையில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 700 சிறை பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு – தேர்தல் செலவு கணக்கு தாக்கல் அவகாசம்!
எனவே சிறை பணியாளர்களை, முன்கள பணியாளர்களாக கருதி அவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சிறை பணியாளர்களில் ஏராளமானோர் தினசரி கொரோனா நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தொற்று பாதிப்பு அதிகமானால் சிறை கைதிகளை பரோலில் விடுவிப்பது குறித்து முடிவெடுக்க அமைக்கப்பட்ட குழு நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.