மதுரை காமராஜர் பல்கலை 2019 நவம்பர் மாத தேர்வு முடிவுகள் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

0
மதுரை காமராஜர் பல்கலை 2019 நவம்பர் மாத தேர்வு முடிவுகள் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
மதுரை காமராஜர் பல்கலை 2019 நவம்பர் மாத தேர்வு முடிவுகள் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
மதுரை காமராஜர் பல்கலை 2019 நவம்பர் மாத தேர்வு முடிவுகள் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி மூலமாக பயின்ற மாணவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முடிவுகள்:

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி மூலமாக பயிலும் மாணவர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கேரளாவை சேர்ந்த சூரஜ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் 2016 ஆம் ஆண்டு பி.ஏ.,(பொருளாதாரம்) படிக்க காமராஜர் பல்கலை தொலைநிலை கல்வியில் சேர்ந்தேன், இந்த படிப்பிற்கான இறுதி பருவத்தேர்வு 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது.

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – ஒரே நாளில் 10,905 பேருக்கு அபராதம்!

அதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுப்பப்பட்ட காரணத்தால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத பருவ தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தொலைநிலை கல்வி படிப்பவர்களுக்கான தேர்வு முடிவுகள் மட்டுமே வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் மற்ற மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட மாட்டாது எனவும், 2019 ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வு எழுதி காத்திருக்கும் எங்களை போன்றவர்களுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனரா என குழப்பம் எழுந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் வெளியிட உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணையின் போது 2019 தேர்வு முடிவு 2021 ஏப்ரலில் வெளியிடப்பட்டுள்ளது என பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவு சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்க பல்கலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!