நீட் தேர்வு விடைத்தாளில் முறைகேடு – விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
கடந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வின் விடைத்தாள் முறைகேடுகளை குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிசிஐடி க்கு உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு:
மருத்துவ துறையில் மாணவர்களை சேர்ப்பதற்காக நீட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுகளை ஆண்டு தோறும் தேசிய தேர்வுகள் முகமை ஆணையம் நடத்துகிறது. 2020 க்கான நீட் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் 5ம் தேதி நடந்தது. இதற்கான ஓஎம்ஆர் விடைத்தாள்களை தேசிய தேர்வு முகமை ஆணையம் வெளியிட்டுள்ளது.
கணினி பிரிவு மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும்- ஆசிரியர் சங்க கோரிக்கை!!!
முறைகேடு:
கோயம்புத்தூரை சேர்ந்த மாணவர் ஒருவர் அக்டோபர் 8 முதல் 16ம் தேதி வரையிலும் தன் மதிப்பெண்களை 700 க்கு 594 ஆக காட்டியதாகவும், திடீரென்று அக்டோபர் 17ம் தேதி முதல் 248 ஆக குறைத்து வெளியிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை மாணவர் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
விசாரணை:
சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் வழக்கறிஞர் தேசிய தேர்வு முகமையின் குளறுபடியால் மாணவர் பலிகடா ஆகியுள்ளதாக தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சைபர் கிரைம் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Velaivaippu Seithigal 2021
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்