தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு – தகவல் வெளியீடு!
உயர் அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் அதிகாரிகளின் வீட்டில் உள்ள ‘ஆர்டர்லி’களை திரும்ப பெறவது தொடர்பாக வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதை பற்றி பார்ப்போம்.
ஆர்டர்லி
தமிழகத்தில் போலீஸ் துறையில் உயர் அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் அலுவலக வாகனங்களில், கருப்பு ‘ஸ்டிக்கர்’ பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் தனி வாகனங்களில் அரசு துறையின் பெயரை தவறாக பயன்படுத்துகின்றனர். மேலும் உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளில் போலீசாரை ஈடுபடுத்தி மிகவும் கஷ்டப்படுத்தி வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர், உயர் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் செய்வதை கட்டுப்படுத்த ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில் அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியிருப்பதாவது, தங்களின் போலீஸ் கனவை நிஜமாக்கி கடுமையாக பயிற்சி பெற்று காவல்துறையில் பணியில் பணியாற்றும் ஆசையில் உள்ளனர்.
TNCSC துறையில் வேலைவாய்ப்பு 2022 – ஆண்களுக்கு முன்னுரிமை! விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ஆனால் இந்த நேரத்தில் உயர் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தால் அவர்கள் தங்களின் சொந்த வேலைக்காக ஆர்டர்லியாக பயன்படுத்தப்படுகிறார்கள். இது சட்டப்படி குற்றமாகும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகள் மீது உடனடியாக வழக்கு பதிவு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் தற்போது உயர் அதிகாரிகளின் வீட்டில் இருக்கும் ஆர்டர்லிகளை மீட்டெடுக்க வேண்டும் என்றும் நீதிபதி அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.