Jio 5G சேவையினால் நிறுவனங்களுக்கு பாதிப்பு? முக்கிய தகவல் இதோ!

0
Jio 5G சேவையினால் நிறுவனங்களுக்கு பாதிப்பு? முக்கிய தகவல் இதோ!
Jio 5G சேவையினால் நிறுவனங்களுக்கு பாதிப்பு? முக்கிய தகவல் இதோ!
Jio 5G சேவையினால் நிறுவனங்களுக்கு பாதிப்பு? முக்கிய தகவல் இதோ!

ரிலையன்ஸ் ஜியோ 5G SA சேவையை அறிமுகப்படுத்த விரும்புவதாக அறிவித்துள்ளது. ஆனால், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G NSA சேவையை தான் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மற்ற நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஜியோவிற்கு மாற வாய்ப்புள்ளது.

ஜியோ 5G:

ரிலையன்ஸ் ஜியோ டிசம்பர் 2023 க்குள் 5G சேவையை நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் வழங்க உள்ளதாக உறுதியளித்துள்ளது. இதற்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்குள் 5ஜி சேவையை ஜியோ தொடங்க உள்ளது. ஆரம்பத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு மட்டுமே ஜியோ 5ஜி சேவை வழங்கப்படும். பின்னர், ஜியோ 5ஜியின் வரம்பை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும். இந்தியாவின் நம்பர் ஒன் டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, 5ஜி மூலம் பார்தி ஏர்டெல்லை விட வோடபோன் ஐடியாவின் அதிக வாடிக்கையாளர்களை தன் வசம்இழுக்க உள்ளது.

5Gக்கு சப்-ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் இருப்பதால் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சிறந்த இன்-பில்டிங் கவரேஜை வழங்குவதே இதற்குக் காரணம். ஒரு செய்திக் குறிப்பில், Jio மற்றும் Airtel ஆகியவை 2023- 2025 நிதியாண்டிற்கு இடையில் 5G கேபெக்ஸில் அதிக பணத்தை முதலீடு செய்ய உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வோடபோன் ஐடியாவின் வாடிக்கையாளர்களை ஜியோ மற்றும் ஏர்டெல் அதிக 5ஜி கேபெக்ஸ் கணக்கில் கைப்பற்றும் என்று ஆய்வாளர் கூறிகின்றனர். ரிலையன்ஸ் ஜியோ 5G SA ஐ அறிமுகப்படுத்த விரும்புவதாகவும் மற்ற ஆபரேட்டர்களை போல 5G NSA க்கு செல்லவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. அதனால்தான் ஜியோவின் மொத்த 5ஜி கேப்க்ஸ் ஏர்டெல்லை விட அதிகமாக இருக்கும் என்று ஆய்வு மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4ம் தேதி தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் – இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!

ஃபைபர் மற்றும்/அல்லது FWA (Fixed Wireless Access) பிராட்பேண்ட் சேவை மூலம் சுமார் 100 மில்லியன் குடும்பங்களை இணைக்கப் பயன்படும் CPE (Consumer Premise Equipment)க்கும் ஜியோ பணத்தை முதலீடு செய்கிறது. ஜியோ 4ஜியைப் போலவே இந்தியாவின் மிகப்பெரிய 5ஜி சேவை வழங்குநராக இருக்கப் போகிறது. வேறு எந்த நிறுவனமும் வழங்காத 5ஜி எஸ்ஏவை ஜியோ பயன்படுத்தப் போகிறது. இதனால், வோடபோன் ஐடியாவின் உயர்நிலை வாடிக்கையாளர்கள் பார்தி ஏர்டெல் மற்றும் ஜியோவிற்கு செல்லலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!