தமிழகத்தில் 11ம் வகுப்பு துணை தேர்வர்களுக்கு நாளை Result – முக்கிய தகவல் இதோ!

0
தமிழகத்தில் 11ம் வகுப்பு துணை தேர்வர்களுக்கு நாளை Result - முக்கிய தகவல் இதோ!
தமிழகத்தில் 11ம் வகுப்பு துணை தேர்வர்களுக்கு நாளை Result - முக்கிய தகவல் இதோ!
தமிழகத்தில் 11ம் வகுப்பு துணை தேர்வர்களுக்கு நாளை Result – முக்கிய தகவல் இதோ!

தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 11ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணை தேர்வு ஆகஸ்ட் 1ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் நாளை வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவு:

தமிழகத்தில் 2021 – 2022ம் கல்வியாண்டில் 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு கடந்த மே மாதம் 2ம் தேதி தொடங்கி மே 13ம் தேதியுடன் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து 10ம் வகுப்பிற்கு மே 6ம் தேதியும், 11ம் வகுப்பிற்கு மே 9 ம் தேதியும், 12ம் வகுப்பிற்கு மே 5ம் தேதியும் பொதுத் தேர்வுகள் நடைபெற தொடங்கியது. இந்த தேர்வானது மே 31ம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஆண்டு 10,11,12 ஆகிய வகுப்புகளில் சுமார் 6,49,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்தது. இதனையடுத்து விரைந்து துணை தேர்வுகளை நடத்தி அனைத்து மாணவர்களையும் பங்கேற்க செய்ய முடிவு செய்யப்பட்டது.

மேலும் முதல் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தனியாக துணை தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தில் மாணவர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவை காணலாம்.

NEET UG 2022 தேர்விற்கான முடிவு எப்போது? அறிவிப்பு வெளியீடு!

அதனை தொடர்ந்து விடைத்தாள் நகல் மற்றும் தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் அந்தந்த பள்ளிகளில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் 11ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் முடிவுகள் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அதிகாரப்பூர்வ இணையதளமான http://dge.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!