தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் சுங்க கட்டணத்தில் அதிரடி உயர்வு – முக்கிய அறிவிப்பு இதோ!

0
தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் சுங்க கட்டணத்தில் அதிரடி உயர்வு - முக்கிய அறிவிப்பு இதோ!
தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் சுங்க கட்டணத்தில் அதிரடி உயர்வு - முக்கிய அறிவிப்பு இதோ!
தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் சுங்க கட்டணத்தில் அதிரடி உயர்வு – முக்கிய அறிவிப்பு இதோ!

தமிழகத்தில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை விலை உயர்ந்துள்ள நிலையில் வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலாக உள்ளது. இதன் எதிரொலியாக பார்சல், கொரியர் உள்ளிட்டவை கட்டணமும் உயர்ந்துள்ளது.

சுங்க கட்டணம் உயர்வு

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணங்களை உயா்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி ஆண்டில் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சுங்க கட்டணத்தை உயர்த்தி கொள்ளலாம் என அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 48 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்த சுங்க சாவடிகளில் முதற்கட்டமாக வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலாக உள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் பணச்சுமையை சமாளிக்க கொரியர் நிறுவனங்களும் தற்போது பார்சல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட கொரியர் நிறுவனங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிறுவனங்கள் பயன்படுத்தும் லாரிகள், சரக்கு ஆட்டோக்களுக்கான டீசல், உதிரி பாகங்கள், 2-ம் நபர் காப்பீட்டு தொகை அதிகரிப்பு , சுங்க கட்டணம், தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பார்சல் கட்டணத்தை உயர்த்தினர். அந்த வகையில் 400 கிமீ தூரத்திற்கு 10 கிலோ எடை கொண்ட பார்சலுக்கு ரூ.150-லிருந்து ரூ.170 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் 600 கிமீ தூரத்திற்கு ரூ.170லிருந்து ரூ. 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

JioMart-யில் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி ஷாப்பிங்? முழு விவரம் இதோ!

அதன்படி தற்போது 15% சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உள்ளூர் கவருக்கு ரூ.10ம், வெளியூர் பார்சலுக்கு ரூ.15ம், வெளி மாநில பார்சலுக்கு ரூ.30ம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை விலை உயர்ந்துள்ள நிலையில் சுங்க கட்டணம் மற்றும் அதனை தொடர்ந்து பார்சல் கட்டணம் உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சுங்க கட்டண விலை உயர்வால் லாரிகளும் விரைவில் கட்டண உயர்வை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாரி வாடகை உயர்வு ஏற்படும் போது அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here