அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு – மாநில வாரியான முழு பட்டியல் இதோ!

0
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு - மாநில வாரியான முழு பட்டியல் இதோ!
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு - மாநில வாரியான முழு பட்டியல் இதோ!
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு – மாநில வாரியான முழு பட்டியல் இதோ!

தற்போது கர்நாடகா, ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூன் 20) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மாநில வாரியான முழு பட்டியலையும் இப்பதிவில் காண்போம்.

விடுமுறை அறிவிப்பு

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், பாரத் பந்த் அழைப்பு காரணமாக கர்நாடகா, ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று (ஜூன் 20) பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இது குறித்த தகவலின் படி, ஜூன் 20 அன்று கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் பீகார் போன்ற பல இடங்களில் பள்ளிகள் உள்ளிட்ட கூடுதல் செயல்பாடுகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் பள்ளிகளை மூடுவதற்கான காரணங்கள் தனித்தனியாக வேறுபட்டிருந்தாலும் இந்த உத்தரவுகள் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை பாதித்துள்ளன.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் அக்னிபாத் போராட்டங்கள் தொடர்பான பாரத் பந்த் நடவடிக்கையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா மாநிலத்திற்கு வருகை தர இருக்கிறார். இதனால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாரத் பந்த் அழைப்புகள் மற்றும் அக்னிபாத் எதிர்ப்பு குறித்த செய்திகள் நாடு முழுவதும் ஒலித்து வருவதால் ஜார்க்கண்டில் இன்று பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இது குறித்த உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, திங்கள்கிழமை பள்ளிகள் முழுமையாக மூடப்படும் என்பதால் தற்போது நடந்துகொண்டிருக்கும் 9 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகளை மாற்றியமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – தலைமை செயலாளர் பரிந்துரை!

மேலும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவு அம்மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பீகார் மாநிலம் பாட்னாவில் பாரத் பந்த் காரணமாக பள்ளிகள் இன்று (ஜூன் 20) மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இம்மாநிலத்தில் போராட்டங்கள் வன்முறையாக மாறுவதை கருத்தில் கொண்டு, சில பீகார் பள்ளிகள் கோடை விடுமுறையை நீட்டித்துள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here