Airtel பயனர்கள் கவனத்திற்கு – ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

0
Airtel பயனர்கள் கவனத்திற்கு - ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
Airtel பயனர்கள் கவனத்திற்கு - ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
Airtel பயனர்கள் கவனத்திற்கு – ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

இந்தியாவின் பிரபல நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரீசார்ஜ் திட்டம்:

அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தற்போது அனைத்து வேலைகளும் ஆன்லைன் மயமாகி விட்ட நிலையில் இன்டர்நெட் தேவை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதனால் நெட்ஒர்க் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு புதிய அதிலும் விலை குறைந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நெட்வொர்க் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 25% வரை உயர்த்தியது. முதன் முதலாக ஏர்டெல் நிறுவனம் தான் ப்ரீபெய்ட் கட்டணத்தை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆரம்ப ரீசார்ஜ் திட்டமான 79 திட்டம் விலை ஏற்றப்பட்டு 99 ரூபாயாக அதிகரித்தது.

TN Job “FB  Group” Join Now

தற்போது ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், அனைத்து நெட்வொர்க்கிற்கு வரம்பற்ற அழைப்பு, டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, விங்க் மியூசிக் பிரீமியம் ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்கு அளிக்கிறது. அடுத்ததாக ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் இதில் தினசரி 1.5ஜிபி டேட்டா, இலவச ஹெலோ டியூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனை, ரூ. 100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை 56 நாட்களுக்கு அளிக்கிறது.

மூர்த்தியின் மருத்துவ செலவிற்கு காசில்லாமல் அல்லாடும் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!

அதனை தொடர்ந்து ரூ.455 ப்ரீபெய்ட் திட்டத்தில் 6 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு, அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ.100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை 84 நாட்களுக்கு அளிக்கிறது. மிரளும் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகளை 28 நாட்களுக்கு அளிக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!