நாடு முழுவதும் மே மாத பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – முழு விவரம் இதோ!

0
நாடு முழுவதும் மே மாத பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் - முழு விவரம் இதோ!
நாடு முழுவதும் மே மாத பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் - முழு விவரம் இதோ!
நாடு முழுவதும் மே மாத பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – முழு விவரம் இதோ!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மே மாதம் எந்தெந்த தினங்கள் விடுமுறை நாட்களாக இருக்கும் என்பது குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது. பொதுமக்கள் அந்த நாட்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல பண பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் விடுமுறை:

நாடு முழுவதும் உள்ள தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கி என ரிசர்வ் வங்கிகளின் கீழ் ஏகப்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றி இருக்கிறது. இந்நிலையில் மே மாதத்திற்கான விடுமுறை அறிவிப்பு குறித்த தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த மாதத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடப்படும் இருந்தாலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை, பணி நாட்கள் தொடர்புடைய விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படும்

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் மே மாதத்தில் ஒன்றாம் தேதி தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் அன்றைய தினம் விடுமுறை ஆகும். ஆனால் அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பணியாளர்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர். அதற்கு இரண்டு நாட்களுக்கு பின் முஸ்லிம் சிறப்பு பண்டிகையான ரம்ஜான் பண்டிகை வருகிறது. அன்றைய தினமும் விடுமுறை ஆகும். அதனை தொடர்ந்து எந்தந்த தினங்களில் விடுமுறை விடப்படும் என்பது குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது.

மேலும் பொதுமக்கள் விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டு அதன் பின் அவர்களுக்கு தேவையான வங்கி சார்ந்த பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், ஒவ்வொரு மாநிலம் அல்லது இனம் சார்ந்த பண்டிகைகளுக்காகவும் தொடர்புடைய பகுதிகளில் மட்டும் வங்கி விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் 2022 ஆம் ஆண்டு மே மாதத்திற்கான விடுமுறை பட்டியல் இதோ,

பணம் கொடுத்ததை குத்திக்காட்டி பேசிய ஜனார்த்தனன், முல்லையை பார்க்க வந்த தனத்தின் அம்மா – இன்றைய எபிசோட்!

 • மே 1 – ஞாயிற்றுக்கிழமை – உழைப்பாளர் தினத்தை ஒட்டி நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
 • மே 2 – திங்கள்கிழமை – ரம்ஜான் பண்டிகை – கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் மட்டும்.
 • மே 3 – செவ்வாய்க்கிழமை – ரம்ஜான் பண்டிகை – கொச்சி, திருவனந்தபுரம் தவிர்த்து நாடு முழுவதிலும் விடுமுறை ஆகும்.
 • மே 8 – ஞாயிற்றுக்கிழமை – நாடெங்கிலும் வார இறுதி விடுமுறை ஆகும்.
 • மே 9 – திங்கள்கிழமை – ரவீந்திரநாத் தாக்கூர் பிறந்தநாள் விழா – மேற்கு வங்கம் மட்டும்.
 • மே 14 – சனிக்கிழமை – இரண்டாம் சனிக்கிழமை அடிப்படையில் நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
 • மே 15 – ஞாயிற்றுக்கிழமை – வார இறுதி அடிப்படையில் நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை.
 • மே 16 – திங்கள்கிழமை – புத்த பூர்ணிமா – நாட்டின் ஒரு சில பகுதிகளில் விடுமுறை.
 • மே 22 – ஞாயிற்றுக்கிழமை – வார இறுதி அடிப்படையில் நாடெங்கிலும் விடுமுறை ஆகும்.
 • மே 28 – சனிக்கிழமை – நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
 • மே 29 – ஞாயிற்றுக்கிழமை – நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here