செப்டம்பர் மாதம் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் இதோ!
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி நடப்பு செப்டம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. எந்தெந்த மாநிலத்தில் விடுமுறை என்பது குறித்த வங்கி விடுமுறை பட்டியலை இப்பதிவில் காண்போம்.
விடுமுறை:
இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இதனையடுத்து ரிசர்வ் வங்கியானது பிற வங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது. நாட்டில் வங்கி சேவை என்பதை அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருவதால் அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களும் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் மத்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை தினங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை மாநிலத்தை பொறுத்து மாறுபடுகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மாறுபடுவதால் விடுமுறை தினங்களிலும் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது அனைத்து பண பரிவர்த்தனைகளையும் ஆன்லைனில் செய்து வந்தாலும் சில முக்கிய வேலைகளுக்கு நாம் வங்கிக்கு நேரடியாக தான் செல்ல வேண்டும். அதனால் நாம் வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். எனினும் இந்த விடுமுறை தினத்தில் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரம் வாயிலாகவும் ஆன்லைன் மூலமாகவும் பண பரிவர்த்தனை செய்யலாம்.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!
வங்கி விடுமுறை நாட்கள்:
- 07.09.2022 – ஓணம் பண்டிகை கேரளாவில் வங்கிகளுக்கு விடுமுறை
- 08.09.2022 – திருவோணம் பண்டிகை விடுமுறை
- 09.09.2022 – இந்திர யாத்திரை கேங்டாக் பகுதியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
- 10.09.2022 – ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி மற்றும் 2ம் சனிக்கிழமை விடுமுறை
- 11.09.2022 – ஞாயிறு விடுமுறை
- 18.09.2022 – ஞாயிறு விடுமுறை
- 21.09.2022 – ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம் கொச்சி, திருவனந்தபுரத்தில் வங்கிகளுக்கு விடுமுறை
- 24.09.2022 – 4ம் சனிக்கிழமை விடுமுறை
- 25.09.2022 – ஞாயிறு விடுமுறை
- 26.09.2022 – நவராத்திரி தொடக்க விழா ஜெய்ப்பூர் மற்றும் இம்பாலில் வங்கிகளுக்கு விடுமுறை
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்