ராணுவப் பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!

0
ராணுவப் பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!
ராணுவப் பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!
ராணுவப் பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!

இந்தியாவில் பெங்களூரு , மும்பை , வெலிங்டன் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள ராணுவ நிலையங்களில் 8000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான முழு விபரங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஆசிரியர் பணியிடம்

இந்தியாவில் கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் உள்ள ராணுவ நிலையங்களில் செயல்பட்டு கொண்டிருக்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேலும் இப்பணியிடத்தில் 8 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் இதனை உடனடியாக நிரப்ப உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், இரண்டு ஆண்டு டிப்ளமோ பட்டயபடிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் தகுதியான நபர்கள் ஆன்லைன் தேர்வு , கற்பித்தல் திறன் மற்றும் கணினி திறன், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 9 மாவட்டங்களுக்கு விடுமுறை – அரசு திடீர் அறிவிப்பு!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://register.cbtexams.in/AWES/Registration/ என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான வயது வரம்பு, பணி அனுபவம், விண்ணப்பிக்கும் முறை குறித்த கூடுதல் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க வருகிற அக்டோபர் 5ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!