மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வுக்கு பிறகு HRA திருத்தம்? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வுக்கு பிறகு HRA திருத்தம்? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வுக்கு பிறகு HRA திருத்தம்? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வுக்கு பிறகு HRA திருத்தம்? முழு விவரம் இதோ!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுத்தொகை அறிவிக்கப்பட்ட பின்னர், ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) திருத்தும் காணும் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

சம்பள உயர்வு

மத்திய ஊழியர்களுக்கு இந்த புத்தாண்டு பல நல்ல செய்திகளை அளிக்க இருக்கிறது. ஏனென்றால் விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான உயர்த்தப்பட்ட 34% அகவிலைப்படி (DA) அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. மறுபுறம், மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப்படியும் விரைவில் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக மத்திய அரசு கடந்த ஜூலை 2021ல், அகவிலைப்படி (DA) தொகையை 28 சதவீதமாக உயர்த்திய பிறகு HRA தொகை திருத்தப்பட்டது. தற்போது, HRA விகிதங்கள் 27%, 18% மற்றும் 9% ஆக இருந்து வருகிறது.

அதே நேரத்தில், 2021 அக்டோபரில் DA தொகை 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்ட பிறகு மீண்டுமாக HRA தொகையின் திருத்தம் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது பணியாளர் மற்றும் வர்த்தகத் துறையின் கூற்றுப்படி, அகவிலைப்படியின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. நகரத்தின் வகையின்படி, அனைத்து ஊழியர்களும் 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என்ற விகிதத்தில் HRA தொகையை பெறுகின்றனர். அதே சமயம், 2015ல், DA உயர்வுடன், HRA தொகையும் அவ்வப்போது உயர்த்தி, அரசு ஆணை பிறப்பித்தது.

இப்போது HRA இன் அடுத்த உயர்வு எப்போது நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு HRA விகிதத்தை 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் DA தொகை 50 சதவீதத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஏனென்றால் மத்திய அரசின் பழைய உத்தரவின்படி, DA 50 சதவீதத்தைத் தாண்டினால், HRA 30 சதவீதம், 20 சதவீதம், 10 சதவீதம் என்று இருக்கும்.

ராதிகாவுடன் கோபி போன் பேசுவதை பார்த்த பாக்கியா, பொய் சொல்லி சமாளிக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இப்போது மத்திய ஊழியர்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) தொகை X, Y மற்றும் Z வகுப்புகளின் நகரங்களுக்கு ஏற்ப கிடைக்கும். இதில் X வகை நகரத்தில் 27 சதவீத HRA மற்றும் Y வகை நகரத்தில் 18 சதவீத HRA கிடைக்கிறது. அதே நேரத்தில், Z வகை நகரங்களில் 9 சதவீத HRA கிடைக்கிறது. இதில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் X பிரிவில் வருகின்றன. இந்த நகரங்களில் பணியமர்த்தப்பட்ட மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 27% HRA கிடைக்கும். அதே சமயம், Y வகை நகரங்களில் 18 சதவீதமாகவும், Z பிரிவில் 9 சதவீதமாகவும் HRA இருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!