Post Officeல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – மோசடி எச்சரிக்கை! முழு விவரம் இதோ!

0
Post Officeல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - மோசடி எச்சரிக்கை! முழு விவரம் இதோ!
Post Officeல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - மோசடி எச்சரிக்கை! முழு விவரம் இதோ!
Post Officeல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – மோசடி எச்சரிக்கை! முழு விவரம் இதோ!

சமீப காலமாக போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்களுக்கு வரும் சில போலியான தகவல்களை நம்பி பணத்தை இழந்து விட வேண்டாம் என இந்திய தபால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனுடன், மோசடியில் இருந்து பணத்தை பாதுகாக்கும் வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

மோசடி எச்சரிக்கை

இன்றைய தொழில்நுட்ப உலகில் அனைத்து வகையான சேவைகளும் கையடக்க மொபைல் போன்களுக்குள் எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், மோசடியும் கூட சகஜமாக நடைபெற்று வருகிறது. அதாவது வங்கி மோசடி, இணையதள மோசடி, ATM மோசடி என பல விதங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது பணங்களை இழந்து வருகின்றனர். இந்த மோசடிகளில் இருந்து வாடிக்கையாளார்களை பாதுகாக்கும் பொருட்டு வங்கித்துறை நிறுவனங்கள் எச்சரிப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இப்போது போஸ்ட் ஆபீஸில் வாடிக்கையாளார்களுக்கும் மோசடி குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இப்போது வங்கிகளை போல, போஸ்ட் ஆபீஸ் திட்டங்களும் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை பெற்றுள்ளது. அதனால் FD, RD மற்றும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு என 9 வகையான சேமிப்பு திட்டங்கள் பொதுமக்களின் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்ட விருப்பமாக இருக்கிறது. இது தவிர போஸ்ட் ஆபீஸ் சேமிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு வட்டி, வருமானம், வரிச்சலுகை பலவற்றை வழங்கி வருகிறது. இந்த சேவைகளின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைக்கும் பணத்தை சில வாடிக்கையாளர்கள் மோசடி மூலம் இழக்கக்கூடிய சூழல் நிலவுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடைகால விடுமுறை அறிவிப்பு? அமைச்சர் விளக்கம்!

இதனால் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை பாதுகாக்க வேண்டும் என இந்திய தபால்துறை எச்சரித்துள்ளது. அதாவது, இந்திய தபால் துறை சர்வே, வினாடி வினா போன்ற சில போட்டிகளை நடத்தி வருவதாகவும், அதன் மூலம் மானியத் தொகை வழங்கப்படுவதாகவும் சில புரளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் சர்வே போட்டிகள், மானியம், போனஸ் அல்லது பரிசுகள் தொடர்பாக வரும், எந்த ஒரு தகவலையும் நம்ப வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதே போல தெரியாத நபர்களிடம் பிறந்த தேதி, அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்ட், ஓடிபி, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர் விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!