மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – யாருக்கெல்லாம் பலன்? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு - யாருக்கெல்லாம் பலன்? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு - யாருக்கெல்லாம் பலன்? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – யாருக்கெல்லாம் பலன்? முழு விவரம் இதோ!

தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி 7வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை 3% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை யாருக்கெல்லாம் பலன் அளிக்கும் என்ற விவரங்களை இப்பதிவில் காணலாம்.

அகவிலைப்படி உயர்வு

சமீபத்தில் 7வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி தொகை 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பலனடைய இருக்கின்றனர். இதற்கிடையில் வரும் ஜூலை மாத தவணைக்கான அகவிலைப்படியை 4% ஆக உயர்த்துவதற்கும் அரசு தற்போது பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில், இதுவரை 7வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் இதுவரை அகவிலைப்படியை பெறாத ஊழியர்களின் DA மொத்தமாக 13 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான DA இந்த ஊழியர்களுக்கும் வழங்கப்படும். இது குறித்த அறிவிப்பில், ‘உண்மையில், 7வது ஊதியக் குழுவின் பலனை இதுவரை பெறாத பல மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். அத்தகைய ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்த வகையில் இந்த மாதம் ஊழியர்களின் கணக்கில் புதிய டிஏ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தவிர 5வது மற்றும் 6வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த நிதியமைச்சகத்தின் கூற்றுப்படி, 5வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான டிஏ 381 சதவீதமாகவும், 6வது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கான டிஏ 196 சதவீதத்தில் இருந்து 203 சதவீதமாக உயர்த்தப்படும். இது மொத்தத்தில் 7 சதவீதம் அதிகரிப்பாகும். மேலும், ஜனவரி 2022 முதல் இந்த ஊழியர்களுக்கு அதிகரித்த DA பலனுடன் மூன்று மாத நிலுவைத் தொகையும் வழங்கப்பட இருக்கிறது.

தனத்தின் பிறந்தநாளுக்காக வந்த குடும்பத்தினர், சமைத்து அசத்திய மீனா ஐசு – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இப்போது அகவிலைப்படி உயர்வு அறிவிப்பின் கீழ் மத்திய துறைகள் அல்லது தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரியும் சில ஊழியர்கள் பலனடைய இருக்கின்றனர். இந்த ஊழியர்கள் இன்னும் ஏழாவது ஊதியக் குழுவில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், நிதி அமைச்சகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, 5 மற்றும் 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி பணிபுரியும் இந்த ஊழியர்கள், 7 முதல் 13 சதவீதம் வரை மொத்த டிஏ பலன்களைப் பெற உள்ளனர். இப்போது DA குறித்த அறிவிப்பு ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக உயர்த்துவதற்கு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here