Flipkart நிறுவனத்தின் 1,00,000 வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 15% அறிவிப்பு – முழு விவரம் இதோ!

0
Flipkart நிறுவனத்தின் 1,00,000 வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 15% அறிவிப்பு - முழு விவரம் இதோ!
Flipkart நிறுவனத்தின் 1,00,000 வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 15% அறிவிப்பு - முழு விவரம் இதோ!
Flipkart நிறுவனத்தின் 1,00,000 வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 15% அறிவிப்பு – முழு விவரம் இதோ!

பிளிப்கார்ட் நிறுவனம் தனது விநியோகச் சங்கிலி வலையமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் சுமார் 1,00,000 புதிய வேலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதில் 15% வேலைவாய்ப்பு பெண்களுக்கு அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

வேலை வாய்ப்புகள்

இந்திய அளவில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், அடுத்த மாதங்களில் வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அதன் விநியோக சங்கிலியை விரிவுபடுத்தியுள்ளது. அந்த வகையில் ஆன்லைனில் வரும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, லட்சக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விற்பனையாளர்கள், கைவினைஞர்கள் ஆகியோரையும் தனது சேவையுடன் இணைத்துள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் தனது சேவைகளை அசாம், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிகரிக்கும் நோக்கத்தோடு, சுமார் 66 இடங்களில் புதிய விநியோகச் சங்கிலி மையங்களை இணைத்துள்ளது. இந்த விரிவுபடுத்தப்பட்ட மையங்களில் சுமார் 1,00,000 ஊழியர்களை பணியில் அமர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

இது தொடர்பாக பிளிப்கார்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘பிளிப்கார்ட் நிறுவனத்தின் சப்ளை சங்கிலி, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகளில் பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் வாடிக்கையாளர்களின் சேவைகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்’ என தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக பிளிப்கார்ட் நிறுவனம், நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட புதிய டெலிவரி மையங்களை (DH) சேர்த்ததன் மூலம் அதன் கடைசி மைல் வரம்பை வலுப்படுத்தியுள்ளது.

தீபாவளி பணம், முதியோர் பென்ஷன் பெற ‘இது’ கட்டாயம் – ஆளுநர் அறிவிப்பு!

குறிப்பாக இந்த ஆண்டில் பிளிப்கார்ட் நிறுவனம் 1,15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்க இருக்கும் நிலையில், அதில் 15 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு விநியோகச் சங்கிலியின் விரிவாக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் விரைவான விநியோகத்தை பெற உதவும் வகையில் பிராண்ட் பார்ட்னர்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட வசதிகளை பிளிப்கார்ட் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!