தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை – முழு விபரம் இதோ!

0
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை - முழு விபரம் இதோ!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை - முழு விபரம் இதோ!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை – முழு விபரம் இதோ!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில் உதவித்தொகையை வழங்க உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி பார்ப்போம்.

உதவித்தொகை

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் நோக்கத்துடன் அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை குறித்த அறிவிப்பை திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் அடைய ஆதிதிராவிடா், பழங்குடியினா் உள்ளிட்ட அனைத்து வகுப்பினரும் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இதே போல் 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி உள்ளிட்ட கல்வித்தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அத்துடன் மாற்றுத்திறனாளிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு நீக்கப்பட்டுள்ளதால் இவர்கள் வருமான சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post Officeல் பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக திட்டங்கள் – முழு விவரம் இதோ!

இதற்கு விண்ணப்பிக்க மனுதாரர்கள் அசல் கல்விச் சான்று, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இந்த உதவித்தொகை மீண்டும் பெற தங்களின் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து தொழிற்கல்வி பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உதவித் தொகை பெற முடியாது. அதனால் தகுதியான நபர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன் அடையுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!