Post Officeல் பயன் தரும் சேமிப்பு திட்டங்கள் – முழு விவரம் இதோ!

0
Post Officeல் பயன் தரும் சேமிப்பு திட்டங்கள் - முழு விவரம் இதோ!
Post Officeல் பயன் தரும் சேமிப்பு திட்டங்கள் - முழு விவரம் இதோ!
Post Officeல் பயன் தரும் சேமிப்பு திட்டங்கள் – முழு விவரம் இதோ!

இந்திய அஞ்சல் துறை மக்களுக்கு உதவக்கூடிய வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பதிவில் தற்போது நடைமுறையில் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

சேமிப்பு திட்டம்:

இந்தியாவில் கொரோனா பரவலால் மக்கள் வேலையிழந்து வருமானம் இன்றி பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் சிலருக்கு சேமிப்பு பணம் கை கொடுத்தது. அதனால் மக்கள் தற்போது அதிக அளவில் சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் வருங்கால வைப்பு நிதி திட்டங்கள், மாதாந்திர வருமான திட்டங்கள், கிராம சுரக்ஷா யோஜனா, செல்வ மகள் சேமிப்பு போன்ற திட்டங்கள் உங்களின் எதிர்கால சேமிப்புக்கு உத்திரவாதத்தை அளிக்கிறது. மேலும் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைக்கும் மக்களுக்கு அஞ்சலக திட்டங்கள் சிறந்த தேர்வாகும். இந்த திட்டங்களில் வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும் அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் பணம் அப்படியே இருக்கும், வட்டி வாயிலாக வருமானமும் கூடுதலாக கிடைக்கும். சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை காலாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசு மாற்றி வருகிறது. ஆனால் கடந்த 8 காலாண்டுகளாக சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றவே இல்லை அரசு பத்திரங்களின் லாபம் பணவீக்கம் போன்ற காரணங்களால் ஜூலை – செப்டம்பர் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எவ்வித மாற்றங்களும் இன்றி அதே நிலை தொடர்ந்து வருகிறது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

சேமிப்பு திட்டங்களும் வட்டி விகிதம்:

பொது வருங்கால வைப்பு நிதி – 7.1%

தேசிய சேமிப்பு சான்றிதழ் – 6.8%

செல்வமகள் சேமிப்பு திட்டம் – 6.8%

கிசான் விகாஸ் பத்திரம் – 6.9%

சேமிப்பு கணக்கு – 4%

1 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட் – 5.5%

2 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட் – 5.5%

3 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட் – 5.5%

5 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட் – 6.7%

5 ஆண்டு ரெகரிங் டெபாசிட் – 5.8%

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!