Jio நிறுவனத்தின் Disney+ Hotstar மொபைல் ப்ரீபெய்ட் திட்டங்கள் திருத்தம் – முழு விவரம் இதோ!

0
Jio நிறுவனத்தின் Disney+ Hotstar மொபைல் ப்ரீபெய்ட் திட்டங்கள் திருத்தம் - முழு விவரம் இதோ!
Jio நிறுவனத்தின் Disney+ Hotstar மொபைல் ப்ரீபெய்ட் திட்டங்கள் திருத்தம் - முழு விவரம் இதோ!
Jio நிறுவனத்தின் Disney+ Hotstar மொபைல் ப்ரீபெய்ட் திட்டங்கள் திருத்தம் – முழு விவரம் இதோ!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ அதன் ஐந்து முக்கிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை திருத்தியுள்ளது. இந்த திருத்தப்பட்ட ரீசார்ஜ் திட்டங்கள் அனைத்தும் ஒரு வருடம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் இணைக்கப்பட்டுள்ளன.

ப்ரீபெய்ட் திட்டங்கள்

சமீப காலமாக இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன், ஜியோ ஆகியவை தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளன. இதற்கிடையில் கடந்த வாரம் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்திய கட்டண உயர்வில் கேள்விக்குரிய சில ரீசார்ஜ் திட்டங்கள் முறையாக சேர்க்கப்படவில்லை. அதனால், இப்போது ஜியோ நிறுவனம் ஐந்து முக்கிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை திருத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளை (டிச.9) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த திருத்தத்தின் விளைவாக, ஜியோ நிறுவனம் தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பயன்பாட்டை அதன் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கு ரூ.601 முதல் வழங்குகிறது. இதன் முந்தைய திட்டமான ரூ.499 இல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த திருத்தப்பட்ட திட்டங்கள் பயனர்களுக்கு 20 சதவீதம் அதிக செலவாகும். இப்போது ஜியோ நிறுவனம் உயர்த்தியுள்ள ரீசார்ஜ் திட்டங்களை விரிவாக காணலாம்.

முதலில் ரூ. 499 திட்டம் இப்போது ரூ. 601 என்ற அளவில், தினசரி 3GB டேட்டா, 6 GB கூடுதல் அதிவேக டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 SMS செய்திகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான வருடாந்திர சந்தாவுடன் 28 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. அடுத்ததாக ரூ. 666 திட்டம் இப்போது ரூ. 799 என்ற அளவில், தினசரி 2 GB டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 SMS செய்திகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான வருடாந்திர சந்தா 56 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது.

WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – செய்திகளை குறிப்பிட்ட காலத்தில் மறைய வைக்கும் புதிய அப்டேட்!

தொடர்ந்து ஜியோவின் ரூ. 888 திட்டம் இப்போது ரூ. 1,066 என்ற அளவில், தினசரி 2 GB அதிவேக டேட்டா, 5 GB கூடுதல் அதிவேக டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எSMS செய்திகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான வருடாந்திர சந்தா 84 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் ரூ. 2,599 திட்டம் இப்போது ரூ. 3,119 என்ற அளவில், தினசரி 2 GB அதிவேக டேட்டா, 10 GB கூடுதல் அதிவேக டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 SMS செய்திகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான வருடாந்திர சந்தா 365 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது.

கடைசியாக ரூ. 549 திட்டம் இப்போது ரூ. 659 என்ற அளவில், தினசரி 1.5 GB அதிவேக டேட்டா, ஆண்டு சந்தா Disney+ Hotstar மொபைல் பாதிப்புடன் 56 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஜியோ நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் முதன் முதலாக தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பதிப்புடன் கொண்டு வந்தது. இதை தொடர்ந்து இத்திட்டங்களுக்கான சமீபத்திய திருத்தம், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வுக்கு பின்பாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!