மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உடன் ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு? சம்பளம் விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உடன் ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு? சம்பளம் விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உடன் ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு? சம்பளம் விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உடன் ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு? சம்பளம் விவரம் இதோ!

சமீபத்தில் வெளிவந்துள்ள 7வது ஊதியக் குழுவின் புதிய செய்திகளின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மீண்டும் ஃபிட்மென்ட் காரணி அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஃபிட்மென்ட் காரணி

நீண்ட நாட்களாக, ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்கக் கோரி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் மத்திய அரசு ஊழியர்கள் இது தொடர்பான சில நல்ல செய்திகளை விரைவில் கேட்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மென்ட் காரணியை அதிகரிக்க அரசாங்கம் விரைவில் ஒப்புதல் அளிக்கலாம் என்று பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் அரசாங்கம், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை சமீபத்தில் 34% ஆக உயர்த்தி அறிவித்தது.

TN Job “FB  Group” Join Now

இதன் மூலம் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயர்த்தவும், ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 மடங்கில் இருந்து 3.68 ஆக உயர்த்தவும் மத்திய அரசு ஊழியர் சங்கம் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தி அரசு அறிவித்தால், அவர்களின் சம்பளம் உயரும்.

அதாவது, 2.57 சதவீதம் என்ற அடிப்படையில், 3.68 சதவீதமாக ஃபிட்மென்ட் பேக்டர் உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம், 8,000 ரூபாயாக உயரும். அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயரும். தற்போது அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆக உள்ளது. இப்போது ஃபிட்மென்ட் பேக்டர் அதிகரித்தால் ரூ.26000 ஆக உயரும். தற்போது அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 என்றால், அலவன்ஸ்கள் தவிர்த்து, 2.57 ஃபிட்மென்ட் காரணியின்படி ரூ.46,260 (18,000 X 2.57 = 46,260) கிடைக்கும்.

பாக்கியாவை வர விடாமல் செய்த கோபி, எழில் ஜானு நெருக்கத்தால் பொறாமைப்படும் அமிர்தா – “பாக்கியலட்சுமி” இன்றைய எபிசோட்!

அதுவே, ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக இருந்தால், சம்பளம் ரூ. 95,680 (26000X3.68 = 95,680) ஆக இருக்கும். இதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 2017ல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு 34 திருத்தங்களுடன் ஒப்புதல் அளித்தது. அதன் படி, முதல் நிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் மாதம் ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆகவும், உயர்நிலை அதாவது செயலாளர் பதவிகளுக்கு ரூ.90,000 லிருந்து ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here