“முத்ரா யோஜனா” திட்டம் மூலம் ரூ.50,000 வரை கடன் – முழு விபரம் இதோ!

0
"முத்ரா யோஜனா" திட்டம் மூலம் ரூ.50,000 வரை கடன் - முழு விபரம் இதோ!
“முத்ரா யோஜனா” திட்டம் மூலம் ரூ.50,000 வரை கடன் – முழு விபரம் இதோ!

இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ “முத்ரா யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரையில் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் விவசாயம் தொடர்புடைய தொழிலுக்கு கடன் வழங்கப்படுவதில்லை. புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மட்டுமே இந்த திட்டம் மூலம் கடன் பயன்பெறலாம்.

முத்ரா யோஜனா

தற்போது கொரோனா சூழலில் பொதுமக்கள் அனைவரும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் இயங்கிவரும் ஒவ்வொரு பொதுத்துறை வங்கியில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி பல கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. அந்த வகையில் சுயமாக தொழில் தொடங்குவோருக்கு பயன் அளிக்கும் வகையில் முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரையில் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது. தேவைக்கு ஏற்ப கடன் தொகைகளை வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம்.

எழிலுக்கு ஆதரவாக பேசும் பாக்கியா, பிசினஸிற்காக விளம்பர படம் எடுக்கும் எழில் – ‘பாக்கியலட்சுமி’ இன்றைய எபிசோடு!

மேலும் இந்த திட்டத்தில் விவசாயம் தொடர்புடைய தொழிலுக்கு கடன் வழங்கப்படுவதில்லை. அத்துடன் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மட்டுமே இந்த திட்டம் பயன்படும். இந்த திட்டத்தில் சேர விரும்புவர்கள் வங்கிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது ஆன்லைன் மூலமாக https://emudra.sbi.co.in:8044/emudra என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு அடையாளச் சான்று, இருப்பிடச் சான்று, புகைப்படம், இயந்திரம் மற்றும் இதர வாகனங்கள் வாங்குவதற்கான ரசீது, தொழிற்சாலை இருக்கும் இடம் ஆகிய விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

NIELIT நிறுவனத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

இதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. அதன்படி எஸ்பிஐ வங்கியில் குறைந்த பட்சம் 6 மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். இதனை தொடர்ந்து தொழில் தொடங்க விரும்பும் விண்ணப்பதாரர் சிறுகுறு தொழில் தொடங்குவோராக இருக்க வேண்டும். இந்த திட்டம் சுயமாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு இந்த திட்டம் நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும். மேலும் இந்த திட்டத்தில் எந்தவொரு கார்பரேட் நிறுவனமும் விண்ணப்பிக்க முடியாது. இந்த திட்டம் கொரோனா காலத்தில் வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here