TNPSC Group 1 தேர்வுக்கு ‘இந்த’ மாவட்ட தேர்வர்களுக்கு இலவச பயிற்சி – முழு விபரம் இதோ!

0
TNPSC Group 1 தேர்வுக்கு 'இந்த' மாவட்ட தேர்வர்களுக்கு இலவச பயிற்சி - முழு விபரம் இதோ!
TNPSC Group 1 தேர்வுக்கு 'இந்த' மாவட்ட தேர்வர்களுக்கு இலவச பயிற்சி - முழு விபரம் இதோ!
TNPSC Group 1 தேர்வுக்கு ‘இந்த’ மாவட்ட தேர்வர்களுக்கு இலவச பயிற்சி – முழு விபரம் இதோ!

தமிழகத்தில் குரூப் 1 பணியிடத்திற்கான தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 30ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பாக இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இலவச பயிற்சி

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலமாக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அத்துடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தேர்வுகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. அதனால் போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் நிலவுகிறது. இந்த நிலையில் தற்போது குரூப் 1 பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 92 பணியிடங்கள் குரூப் 1 தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 30ம் தேதி அன்று நடைபெற உள்ளது. குரூப் 1 தேர்வின் முதன்மை தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தற்போது இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் செப்.3 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!

இவர்களுக்கு உதவும் வகையில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 24ம் தேதி முதல் இலவச நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், மாவட்டத்தில் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இலவசமாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பயிற்சி பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இதில் பயிற்சி பெற தங்களின் புகைப்படம், ஆதார் நகல் உடன் எடுத்து வர வேண்டும். இந்த பயிற்சி வகுப்புகள் அரசு விடுமுறை நாள்களை தவிர்த்து அனைத்து வேலை நாட்களிலும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here