Post Officeல் பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக திட்டங்கள் – முழு விவரம் இதோ!

0
Post Officeல் பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக திட்டங்கள் - முழு விவரம் இதோ!
Post Officeல் பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக திட்டங்கள் - முழு விவரம் இதோ!
Post Officeல் பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக திட்டங்கள் – முழு விவரம் இதோ!

இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக போஸ்ட் ஆஃபீசிலும் மக்கள் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகள் எதிர்காலத்திற்கு பயனுள்ள பல திட்டங்கள் போஸ்ட் ஆஃபிஸில் செயல்படுத்தப்படுகிறது.

போஸ்ட் ஆபீஸ்:

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு நாடானது பல பொருளாதார இழப்புகளை சந்தித்தது. மக்களும் வேலையின்மை, வறுமை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். இத்தகைய சூழ்நிலையில் மக்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் கட்டாயத்தில் உள்ளனர். கொரோனாவுக்கு பிறகு நிதி சுமை அதிகரித்துள்ள நிலையில் சேமிப்பு, முதலீடு என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் கூடுதலாக சேமிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் வங்கிகளை தொடர்ந்து போஸ்ட் ஆஃபீஸ்களிலும் பெண் குழந்தைகள் எதிர்காலத்தை பாதுகாக்க கூடிய நல்ல திட்டங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதாவது பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கை போலவே தபால் அலுவலக சேமிப்பு கணக்கிலும் 4% வட்டி விகிதத்துடன் வழங்கப்படுகிறது. இதில் பொது வருங்கால வாய்ப்பு நிதி சிறந்த சேமிப்பு திட்டமாகும். இதில் 7.1% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் குறைந்தபட்ச வாய்ப்பு வரம்பு ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொடர் வைப்பு திட்டமும் சிறந்த திட்டமாகும். இதை பெற்றோர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்யலாம். மேலும் இதற்கான வட்டி ஆண்டுக்கு 5.8% ஆகும். இந்த திட்டத்துக்கான குறைந்தபட்ச வைப்பு வரம்பு ரூ.100 மற்றும் திட்டம் முழுவதும் முடிவதற்குள் பணத்தை எடுக்க முடியாது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – விடைத்தாள் நகல் வெளியீடு!

இதே போல் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெண் குழந்தைகளுக்கான பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும். இதில் குழந்தைகள் 10 வயது ஆகும் வரை முதலீடு செய்யலாம். மேலும் இந்த திட்டத்தில் 7.6% வட்டி விகிதத்தில் குறைந்தபட்ச வைப்பு தொகை ரூ.1000 மற்றும் அதிகபட்ச வரம்பு ரூ. 15 லட்சம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடையும் வரை தொகையை பெற முடியாது. இதனை தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு உத்தரவாத வருமானத்துடன் வரும் அஞ்சல் அலுவலக திட்டங்களில் கிசான் விகாஸ் பத்ரா திட்டமும் ஒன்று. இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச வைப்பு தொகை ரூ.1000 மற்றும் லாக் இன் நேரம் 30 நாட்கள் ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!