TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கான முக்கிய அறிவிப்பு – தேதி மாற்றம்! முழு விவரம் இதோ!

0
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கான முக்கிய அறிவிப்பு - தேதி மாற்றம்! முழு விவரம் இதோ!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கான முக்கிய அறிவிப்பு - தேதி மாற்றம்! முழு விவரம் இதோ!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கான முக்கிய அறிவிப்பு – தேதி மாற்றம்! முழு விவரம் இதோ!

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது TET முதல் தாள் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இப்பதிவில் காண்போம்.

TET தேர்வு:

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பேரிடரால் கடந்த 2 வருடமாக TET தேர்வு நடைபெறவில்லை. இதனால் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை நிரப்ப ஆசிரியர் தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த TET தேர்வு 2 தாள்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கானது, இதற்க்கு ஆசிரியர் பயிற்சி (D.TED) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதனை தொடர்ந்து இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கானது (B.ED) கல்வி தகுதியுடையோர் தேர்வை எழுதலாம். இத்தேர்வுக்கான விண்ணப்பபதிவுகள் முடிவடைந்த நிலையில் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் TET முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்தது. இந்த நிலையில் சில நிர்வாக காரணங்களால் தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன் படி செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

இந்த ஆண்டு முதன் முறையாக TET தேர்வு கணினி வழியில் நடைபெற உள்ளது. இதற்கு பயிற்சி பெற விரும்புபவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்ளலாம். தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு பயிற்சி வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு குறித்த முழு விவரங்கள் மற்றும் தேர்வுக்கூட அனுமதி சீட்டு, தேர்வு கால அட்டவணை போன்றவைகள் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!