மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.90,000 வரை சம்பள உயர்வு? கணக்கீட்டு விவரங்கள் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.90,000 வரை சம்பள உயர்வு? கணக்கீட்டு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.90,000 வரை சம்பள உயர்வு? கணக்கீட்டு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.90,000 வரை சம்பள உயர்வு? கணக்கீட்டு விவரங்கள் இதோ!

மத்திய அரசு ஊழியர்கள் 2022 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) தொகையை 3% ஆக பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் ஊதியம் ரூ.90,000 வரை உயரக்கூடும். இது தொடர்பான கணக்கீட்டு விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

தற்போது 7வது சம்பள கமிஷனின் சமீபத்திய செய்திகளின் படி, பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பம்பர் பரிசு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. அதாவது 2022 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) உயர்வு காரணமாக 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க இருக்கிறது. அந்த வகையில் ஊழியர்கள் ரூ.90,000 வரை சம்பள உயர்வு பெறுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர் 2021ல் அகவிலைப்படி (DA) தொகை 31% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தொகை இதுவரையும் அரசு ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதற்கிடையில் 2022 ஜனவரி மாதத்திற்கான 3% அகவிலைப்படி தொகையும் மத்திய அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது. இது தொடர்பான ஊடக அறிக்கைகளின்படி, DA உயர்வு தொடர்பான அறிவிப்பு மார்ச் மாத இறுதிக்குள் நடக்கலாம் என்று தெரிகிறது.

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளே தொடரும் – மாநில அரசு அறிவிப்பு!

இப்போது டிசம்பர் 2021 வரையிலான AICPI தரவுகளின்படி, DA விகிதம் 34.04% ஆக உள்ளது. தொடர்ந்து 2022 ஜனவரி மாதத்திற்கான 3% அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, ரூ.18,000 அடிப்படைச் சம்பளத்தில் ஊதியம் பெரும் நபர்களுக்கு DA தொகை ஆண்டுக்கு ரூ.73,440 ஆக இருக்கும். இப்போது மத்திய அரசு ஊழியர்கள் பெறும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு விவரங்களை காணலாம்.

பணியாளரின் அடிப்படை சம்பளம்: ரூ 18,000

புதிய DA (34%) – ரூ.6120/மாதம்

DA இதுவரை (31%) – ரூ.5580/மாதம்

அகவிலைப்படி அதிகரித்தது – 6120- 5580 = ரூ.540/மாதம்

ஆண்டு ஊதிய உயர்வு 540X12 = ரூ.6,480

மொத்த DA – 6120X12 = ரூ.73,440

பணியாளரின் அடிப்படை சம்பளம்: ரூ 56900

புதிய DA (34%) – ரூ.19346 / மாதம்

DA இதுவரை (31%) – ரூ.17639 / மாதம்

அகவிலைப்படி அதிகரிப்பு – 19346-17639 = ரூ.1,707/மாதம்

ஆண்டு ஊதிய உயர்வு 1,707 X12 = ரூ.20,484

மொத்த DA – 19346X12 = ரூ.232,152

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!