PM Kisan திட்ட பயனாளர்களுக்கு 12வது தவணை எப்போது? முழு விவரங்கள் இதோ!

0
PM Kisan திட்ட பயனாளர்களுக்கு 12வது தவணை எப்போது? முழு விவரங்கள் இதோ!
PM Kisan திட்ட பயனாளர்களுக்கு 12வது தவணை எப்போது? முழு விவரங்கள் இதோ!
PM Kisan திட்ட பயனாளர்களுக்கு 12வது தவணை எப்போது? முழு விவரங்கள் இதோ!

PM Kisan திட்டத்தின் மூலமாக இதுவரைக்கும் விவசாயிகள் 11 தவணைக்கான நிதியுதவியை பெற்றுள்ளனர். இந்நிலையில், 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் வேளையில் 12 ஆவது தவணை எப்போது என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

PM Kisan:

இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் அனைவருக்கும் பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் மூலமாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஒரு வருடத்திற்கு மட்டும் ரூ.6000 வரைக்கும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இது வரைக்கும் விவசாயிகள் 11 தவணைக்கான நிதியுதவியை பெற்றுள்ளனர். அடுத்ததாக, விவசாயிகள் 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், அடுத்த மாதத்தில் PM Kisan Yojana திட்டத்தின் 12 ஆவது தவணையை பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது PM Kisan திட்டத்தின் நிதியுதவியை பெறுவதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, PM Kisan கணக்குடன் கட்டாயமாக ஆதார் கார்டை இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால் மட்டுமே 12 ஆவது தவணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால் 155261, 1800115526 அல்லது 011-23381092 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும், [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு – சத்தீஸ்கர் அரசின் சூப்பரான அறிவிப்பு!

மேலும், PM Kisan Yojana திட்டத்தில் சேர விரும்புபவர்கள் pmkisan.gov.in என்கிற அதிகாரப்பூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று இணைந்து கொள்ளலாம். மேலும், எப்படி 12 ஆவது தவணைக்கான நிலையை அறிந்துகொள்வது என்பதை பார்க்கலாம். முதலில், PM Kisan இணையதள பக்கத்திற்கு சென்று அதில் உள்ள விவசாயிகள் கார்னர் என்கிற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், Beneficiary Status என்கிற பகுதியை கிளிக் செய்து ஆதார் எண், மொபைல் எண் ஆகிய அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பின்னர், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்துவிட்டால் PM Kisan திட்டத்தின் நிலையை அறிந்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!