ஐடி துறை ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – விவரம் இதோ!

0
ஐடி துறை ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - விவரம் இதோ!
ஐடி துறை ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - விவரம் இதோ!
ஐடி துறை ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – விவரம் இதோ!

இந்திய ஐடி துறையில் கடந்த ஆண்டுகளில் ஊழியர்களின் தேவை அதிகரித்தது. இதனை பூர்த்தி செய்ய முன்னணி நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி ஊழியர்களை பணியமர்த்தியது. இந்த நிலையில் ஐடி ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஐடி துறை:

உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து துறைகளும் சரிவை சந்தித்தது. அத்தகைய இக்கட்டான நேரத்தில் ஐடி துறை மட்டும் வளர்ச்சி கண்டது. ஏனெனில் மக்கள் தொற்று அச்சத்தால் வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் இருந்தே ஆன்லைன் வாயிலாக அனைத்து வேலைகளையும் செய்ய முற்பட்டனர். அதனால் மக்களுக்கு ஐடி துறையின் தேவை அதிகரித்தது. அதே நேரம் ஊழியர்களின் தேவையும் வேண்டியிருந்தது. அப்போது ஐடி நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை பணியமர்த்தவும், தற்போது உள்ள ஊழியரை தக்க வைக்கும் முயற்சியாக ஊதிய உயர்வு, வேரியபிள் பே உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்தது.

இதனால் தேவைக்கேற்றவாறு ஊழியர்கள் அதிகரித்தனர். அதே போல ஐடி துறை வளர்ச்சியும் கண்டது. இதற்கு மத்தியில் 2022ம் ஆண்டு ஐடி துறையின் சேவை சரியாலம் என்று கணித்து புதிய பணியாளர்களை நியமிப்பதை நிறுவனங்கள் தவிர்த்தது. மேலும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளும் குறைக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது வேரியபிள் பேவினை குறைத்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து சில இந்திய நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தினை அவர்களின் செயல்திறனுடன் இணைத்தது.

தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அறிமுகம் – ராதாகிருஷ்ணன் துவக்கம்!

இது ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனங்கள் தற்போது தங்களது செலவினங்களை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மார்ஜின் விகிதம் 3.6% குறைந்து 20.1% ஆக உள்ளது. அத்துடன் விப்ரோவின் மார்ஜின் விகிதம் 15% ஆகவும் குறைந்துள்ளது. இது முன்னதாக 18.8% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு வித எச்சரிக்கையாக உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!