ஆன்லைன் மூலமாக வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைப்பு – இதோ உங்களுக்கான வழிமுறைகள்!

0
ஆன்லைன் மூலமாக வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைப்பு - இதோ உங்களுக்கான வழிமுறைகள்!
ஆன்லைன் மூலமாக வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைப்பு - இதோ உங்களுக்கான வழிமுறைகள்!
ஆன்லைன் மூலமாக வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைப்பு – இதோ உங்களுக்கான வழிமுறைகள்!

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்காளர் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்தே இதனை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு:

இந்தியாவில் வசிக்கும் மக்களின் முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசின் துறை சார்ந்த அனைத்து பணிகளையும் மேற்கொள்ள இந்த ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள 12 இலக்க எண் மிக முக்கியமானதாக எடுத்து கொள்ளப்படுகின்றது. மேலும் இத்தகைய ஆதார் எண்ணை பயன்படுத்தி நாட்டில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மேலும் வாக்காளர் அட்டையை பயன்படுத்தி போலி வாக்காளர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து இந்திய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை, அவரவர் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தேர்தல் சட்ட திருத்த மசோதா 2021 இயற்றப்பட்டது. தற்போது இந்தியா முழுவதிலும் தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த செயல்முறையை வீட்டில் இருந்து செயல்படுத்துவது குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களுக்காக அறிவிப்பு – ஆன்லைன் முன்பதிவுக்கு அனுமதி!

1. முதலில் உங்கள் மொபைல் போனில் `voter helpline app’- ஐ டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஆப்பை திறந்து அதில் தோன்றும் I Agree பகுதியை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.

2. அதன் பிறகு திறக்கும் பக்கத்தில் Voter Registration என்ற பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், Electoral Authentication Form (Form 6B) என்ற பகுதியை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும்.

3. இதனை தொடர்ந்து Let’s Start என்ற தேர்வை கிளிக் செய்து கொள்ள வேண்டும். இதன் பிறகு உங்கள் மொபைல் எண் கேட்கப்படும். இங்கு ஆதார் எண்னுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை குறிப்பிட வேண்டும்.

4. கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு `one time password – OTP’ ஒன்று அனுப்பப்படும். அதனை உள்ளிட வேண்டும். அதன் பிறகு `Yes, I have voter ID’ என்ற பகுதியை தேர்வு செய்து, பின் NEXT என்ற பகுதியை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.

5. இங்கு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட வேண்டும். இதனை தொடர்ந்து நீங்கள் வசிக்கும் மாநிலம், `fetch details’ என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ‘proceed’ கொடுக்க வேண்டும். மேலும் தொடர்ந்து உங்களுடைய ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு, `Done’ என்று கொடுக்கவும்.

6. இதனுடன் process முடிந்து உங்களுடைய FORM- 6B காண்பிக்கப்படும். இதில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை சரிசெய்து மற்றொரு முறை confirm என்று கொடுத்தால் உங்களுடைய வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் process முடிவடைந்துவிடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!