வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!

0
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு - எளிய வழிமுறைகள் இதோ!
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு - எளிய வழிமுறைகள் இதோ!
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான எளிய வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதார் எண் இணைப்பு:

இந்திய தேர்தல் ஆணையம் (EC) ஆகஸ்ட் 1 முதல் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் முயற்சியை பல மாநிலங்களில் தொடங்கியுள்ளது. அதாவது வாக்காளர் பட்டியலில் வாக்காளரை உறுதி செய்யவும், ஒரு வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இடம் பெறுவதை தவிர்க்கவும், ஒரு வாக்காளரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றிருந்தால் அவற்றை கண்டறியவும் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பிடிஐ அறிக்கையின்படி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியது, வாக்காளர் அடையாள அட்டையுடன் தனிப்பட்ட அடையாள எண்ணை இணைப்பது விருப்பமானது என்றும், அதை இணைக்காததற்கு வாக்காளர்கள் போதுமான காரணத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விரும்புபவர்கள் புதிய படிவம் 6B ஐ நிரப்புவதன் மூலம் செய்யலாம். ஒரு வாக்காளர் ஆதார் எண்ணை ஆன்லைனிலும், ஆப்லைனிலும் சமர்ப்பிக்கலாம். மேலும் தேர்தல் பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நபரும் அவரது ஆதார் எண்ணுடன் தேர்தல் பதிவு அதிகாரியிடம் படிவம் 6B ஐ சமர்ப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

மொபைல் மூலம் ஆன்லைனில் EPIC உடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கு எளிய படிகள்:

  • EPIC கார்டுதாரர் முதலில் Google Play Store ( Android பயனர்கள்) அல்லது App Store (iPhone பயனர்கள்) ஆகியவற்றிலிருந்து வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும்.
  • நிறுவல் முடிந்ததும், வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியைத் திறந்து, “நான் ஒப்புக்கொள்கிறேன்” மற்றும் “அடுத்து” என்பதைக் கிளிக் செய்யவும். தோன்றும் விருப்பங்களில், முதல் விருப்பமான “வாக்காளர் பதிவு” என்பதைக் கிளிக் செய்து, பின்னர் “தேர்தல் அங்கீகாரப் படிவம் (படிவம் 6 பி)” மற்றும் “தொடங்கலாம்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இப்போது, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, “OTP அனுப்பு” என்பதைக் கிளிக் செய்யவும். மொபைல் எண்ணில் பகிரப்பட்ட OTP ஐ உள்ளிட்டு, “சரிபார்” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இதற்குப் பிறகு, “ஆம் என்னிடம் வாக்காளர் ஐடி உள்ளது” என்ற முதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, “அடுத்து” என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது “வாக்காளர் ஐடி (EPIC)” எண்ணை உள்ளிட்டு, “மாநிலம்” என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் “விவரங்களைப் பெறு” மற்றும் “தொடரவும்” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • திரையில் காட்டப்பட்டுள்ள விவரங்களை உள்ளிட்டு, “அடுத்து” என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது, “ஆதார் எண்”, “மொபைல் எண்”, “விண்ணப்பிக்கும் இடம்” ஆகியவற்றை உள்ளிட்டு, “முடிந்தது” என்பதைக் கிளிக் செய்யவும், படிவம் 6B முன்னோட்டம் பக்கம் காட்டப்படும்.
  • விவரங்களைச் சரிபார்த்து, படிவம்-6B இன் இறுதிச் சமர்ப்பிப்பதற்கு “உறுதிப்படுத்து” என்பதைக் கிளிக் செய்யவும். இறுதி உறுதிப்படுத்தலுக்குப் பிறகு படிவம் 6B இன் ஆதார் எண் பெறப்படும்.
  • படிவம்- 6B என்பது வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை ECI உடன் பகிர்ந்து கொள்வதற்காகும். இது nvsp.in இல் ஆன்லைனில் கிடைக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here