Digital Voter ID Card – ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறைகள் இதோ!

0
Digital Voter ID Card - ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறைகள் இதோ!
Digital Voter ID Card - ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறைகள் இதோ!
Digital Voter ID Card – ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறைகள் இதோ!

இது தேர்தல் காலம் என்பதால் பயனர்கள் வாக்களிக்க ஏதுவாக மின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை (e-EPIC) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வாக்காளர் அட்டை

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2022ம் ஆண்டில் கோவா, ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதே போல தமிழகத்திலும் வரும் பிப்ரவரி 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயனர்கள் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை (e-EPIC) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

விஜய் டிவி முன்னணி சீரியலில் களமிறங்கும் “பிக்பாஸ் ராஜு” – வைரலாகும் புகைப்படம்!

இந்த புகைப்பட அடையாள அட்டையான e-EPIC என்பது மின் டிஜிட்டல் பதிப்பாகும். இந்த அட்டையை https://voterportal.eci.gov.in/ மற்றும் https://www.nvsp.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இதனை மொபைல் போன்களில் சேமித்து வைக்க முடியும். இப்போது ஒரு வாக்காளரின் அசல் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டால், இந்த மின் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பயன்படுத்தி தேர்தலில் வாக்குப்பதிவுகளை செலுத்த முடியும்.

அதே நேரத்தில் பயனர்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி, மாநிலம், நகரம் போன்ற விவரங்களையும் புதுப்பித்து கொள்ள முடியும். இப்போது வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள,

TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இன்னும் 18 நாட்கள் தான்! முக்கிய அறிவிப்பு!

  • முதலாவது தேர்தல் ஆணையத்தின் https://voterportal.eci.gov.in அல்லது https://nvsp.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • இப்போது NVSP கணக்கில் லாகின் செய்யவும்.
  • புதிய கணக்கு என்றால் அதில் பதிவு செய்ய வேண்டும்.
  • அதற்கு மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் தேவைப்படும்.
  • இந்த கணக்கை உருவாக்கிய பிறகு அதில் கேட்கப்படும் சில விவரங்களை உள்ளிடவும்
  • பிறகு, EPIC எண் அதாவது படிவ குறிப்பு எண்ணை உள்ளிட்டு மாநிலத்தை தேர்வு செய்யவும்.
  • இப்போது submit கொடுத்ததும், OTP எண்ணை உள்ளிட வேண்டும்.
    பிறகு e-EPIC ஐ பதிவிறக்கம் செய்யவும்.
  • இந்த வாக்காளர் அடையாள அட்டை pdf ஆக பதிவிறக்கம் ஆகும்.
  • இந்த ஆவணத்தை எதிர்கால பயன்பாட்டிற்காக save செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளவும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!