SBI வங்கி சேவைகளை வீட்டில் இருந்தே பெறலாமா? எளிய வழிமுறைகள் இதோ!

0
SBI வங்கி சேவைகளை வீட்டில் இருந்தே பெறலாமா? எளிய வழிமுறைகள் இதோ!
SBI வங்கி சேவைகளை வீட்டில் இருந்தே பெறலாமா? எளிய வழிமுறைகள் இதோ!
SBI வங்கி சேவைகளை வீட்டில் இருந்தே பெறலாமா? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் சேவைகளை வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் பெறலாம். இதற்கான எளிய வழிமுறைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

வங்கி சேவைகள்

இந்தியாவில் தற்போது அனைத்து சேவைகளையும் ஆன்லைன் முறையில் பெற முடிகிறது. அந்த வகையில் தற்போது அனைத்து வங்கி சேவைகளையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் பெற முடிகிறது. இதனால் வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. இதையடுத்து தற்போது அனைத்து வங்கி நிறுவனங்களும் தங்களின் சேவையை வாட்ஸ் அப் செயலி மூலமாக வழங்க முன் வந்துள்ளன. மேலும் ஒவ்வொரு வங்கிகளுக்கும் ஒரு வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இப்பதிவில் SBI வங்கி சேவையை பெறுவது குறித்து விரிவாக பார்ப்போம்.

மேலும் SBIயின் வாட்ஸ்அப் சேவை மூலமாக வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களின் கணக்கு இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மென்ட், கடந்த ஐந்து பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இச்சேவையை பெற விரும்பும் நபர்கள் முதலில் தங்கள் கணக்குகளை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் பதிவு செய்யவில்லையெனில் தங்கள் வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து SMS WAREG A/c என்பதை 917208933148 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். உங்கள் பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு உங்களால் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தி கொள்ள முடியும்.

தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களுக்காக புதிய திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!

வழிமுறைகள்:

1. வாட்ஸ்அப் சேவையை மேற்கொள்ள 919022690226 என்ற எண்ணிற்கு ‘HI’ அனுப்ப வேண்டும்.

2. அதன்பின்பு உங்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக “அன்புள்ள வாடிக்கையாளரே, நீங்கள் வெற்றிகரமாக எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைக்காகப் பதிவு செய்துள்ளீர்கள்” என்ற செய்தி அனுப்பப்படும்.

3. பின்னர், இதற்குரிய பதிலை அளித்ததும் “அன்புள்ள வாடிக்கையாளரே, SBI Whatsapp வங்கி சேவைகளுக்கு வரவேற்கிறோம்” என்ற செய்தியை பெறுவீர்கள்.

4. இப்போது உங்களால் Whatsapp செயலி மூலமாக SBI வங்கி சேவையை பெற முடியும்.

5. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்பும் நபர்கள் https://bank.sbi/ என்ற SBIயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!