வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்துவ அடையாள அட்டையாக கருதப்படும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை இரண்டையும் இணைப்பதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஆதார் இணைத்தல்:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு தனித்துவ அடையாள அட்டையாக வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை கருதப்படுகிறது. இந்த இரண்டு அட்டைகளுமே அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக கேட்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஆதார் எண் அனைத்து ஆவணங்களுடனும் இணைக்கப்பட்டு வருகிறது. அதாவது வங்கி கணக்கு, வருங்கால வைப்பு நிதி, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? ஓமைக்ரான் நோய்த்தொற்று எதிரொலி!

ஆனால் இன்னும் சில மாநிலங்களில் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை சில முக்கிய தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய வாக்காளர் சேவையகத்தின் அதிகாரபூர்வ வலைதளம், SMS, தொலைபேசி அழைப்பு என 3 விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

இன்று முதல் ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை – பிரதமர் அறிவிப்பு!

தேசிய வாக்காளர் சேவையகத்தின் மூலம் ஆதார் இணைப்பதற்கான எளிய வழிமுறைகள்:

1. முதலில் https://voterportal.eci.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. பின்னர் மொபைல் எண், இ-மெயில் ஐடி, வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விபரங்களை கொடுத்து Login செய்ய வேண்டும்.

3. அதன்பின் தோன்றும் பக்கத்தில் வாக்காளரின் பெயர், ஊர், மாவட்டம், மாநிலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்து Search பட்டனை கிளிக் செய்து தரவுகளை சரிபார்க்க வேண்டும்.

4. விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் Feed Aadhaar No என்பதை கிளிக் செய்து ஆதாரில் உள்ள விபரங்களை கொடுத்து Submit செய்ய வேண்டும்.

அதேபோல் 166 அல்லது 51969 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதன் மூலமாகவும், 1950 என்ற தொலைபேசி எண்ணுக்கு போன் செய்வதன் மூலமாகவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!