TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தமிழகத்தில் இம்மாதம் 24ம் தேதியன்று நடைபெற இருக்கும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை TNPSC தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

ஹால் டிக்கெட்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 7382 காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த குரூப் 4 போட்டி தேர்வானது ஜூலை 24ம் தேதியன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளதால் அதிகளவு போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி தேர்வு நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே மீதம் இருக்கும் நிலையில் இன்று (குரூப் 4) போட்டித்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்போது தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பெற்று கொள்ளலாம். அந்த வகையில் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இணையத்தளத்தில் இருந்து எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்ற விவரங்களை கீழே விரிவாக காணலாம்.

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

  • முதலில் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
    அதன் முகப்பு பக்கத்தில் உள்ள Hall Ticket Download என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • இப்போது திறக்கும் புதிய பக்கத்தில் நிரந்தர பதிவு விவரங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுசொல் ஆகியவற்றை உள்ளிட்டு, கேப்சா குறியீட்டை பிழை இல்லாமல் கொடுக்கவும்.
  • அடுத்ததாக டேஷ்போர்டில் உங்களது விண்ணப்ப விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • அதில் குரூப் 4 தேர்வுக்கு நேராக ஹால் டிக்கெட் டவுன்லோட் என்று இருக்கும்.
  • அதை கிளிக் செய்து விண்ணப்ப எண்ணை கொண்டு உள்நுழையவும்.
  • இப்போது திரையில் தோன்றும் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!