TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.7.3 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

0
TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.7.3 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.7.3 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.7.3 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7.3 லட்சம் வரையிலான சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.

வேலை வாய்ப்புகள்

தற்போது பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது ‘ஆஃப் கேம்பஸ் டிஜிட்டல் பணியமர்த்தல்’ திட்டத்திற்கு பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 25 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக TCS நிறுவனம் வெளியிட்டுள்ள இணையதள அறிவிப்பின் படி, ‘TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள் காத்திருக்கிறது.

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புத்தகம் இல்லா தினம்!

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இந்த தேதிகள் விரைவில் நிறுவனத்தால் அறிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதிக்கேற்ப சம்பளம் பெறுவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது TCS நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் இளங்கலை பட்டதாரிகளுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.7 லட்சமும், முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7.3 லட்சமும் சம்பளமாக வழங்கப்பட இருக்கிறது. இப்போது இப்பணிக்கான தகுதி, விண்ணப்ப முறைகளை விரிவாக காணலாம்.

தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – அதிரடி அறிவிப்பு!

கல்வித்தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் இளங்கலை (B.Tech) அல்லது முதுகலை தொழில்நுட்பம் (M.Tech) அல்லது இளங்கலை (B.E) அல்லது முதுகலை பொறியியல் (M.E), MCA அல்லது M.Sc பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 2019,2020, 2021ம் ஆண்டுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • குறிப்பாக, 10, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 70% மொத்த மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
  • கல்வியில் எந்த பின்னடைவுகளையும் கொண்டிருக்கக்கூடாது.
  • மற்றும் குறிப்பிட்ட காலப்பகுதியில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • அனைத்து விண்ணப்பதாரர்களும் கல்வியில் ஏதேனும் இடைவெளி இருந்தால் அதை அறிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.
  • அதிகபட்ச கல்வி இடைவெளி 24 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    முழுநேர படிப்புகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் குறைந்தபட்சம் 6 முதல் 12 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தேர்வு முறை:

  • TCS நிறுவனம் நடத்தும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் என்ற இரண்டு சுற்றுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • இதில் எழுத்துத் தேர்வு மேம்பட்ட அளவு திறன் (40 நிமிடங்கள்), வாய்மொழி திறன் (10 நிமிடம்), மேம்பட்ட குறியீட்டு முறை (60 நிமிடம்) என்ற அளவில் இருக்கும்.

விண்ணப்ப முறை:

  • முதலில் விண்ணப்பதாரர்கள் https://nextstep.tcs.com/campus/#/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
  • உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, டிஜிட்டல் டிரைவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • இது ஒரு முக்கியமான படியாகும்.
  • தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் TCS Resonance மூலம் ஆன்லைன் தேர்வுக்கு தயாராகலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here