TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றிப் பெற்றால் கிடைக்கும் வேலைகள் – முழு விபரங்கள் இதோ!

0
TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றிப் பெற்றால் கிடைக்கும் வேலைகள் - முழு விபரங்கள் இதோ!
TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றிப் பெற்றால் கிடைக்கும் வேலைகள் - முழு விபரங்கள் இதோ!
TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றிப் பெற்றால் கிடைக்கும் வேலைகள் – முழு விபரங்கள் இதோ!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்புகள் வருகிற 2022- ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வெளியாகும் என நேற்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் வெற்றி பெற்றால் எந்த பணிகளில் பணிபுரியலாம் என விரிவாக பின்வருமாறு பார்ப்போம்.

குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு விவரங்கள்

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்தது. இதில் குறிப்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது டிஎன்பிஎஸ்சி 2022-ஆண்டுக்கான திட்டத்தை நேற்று அறிவித்தது. இதில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் வருகிற 2022- ஆம் ஆண்டில் மார்ச் மாதம் வெளியாகும் என்றும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்புகள் வருகிற 2022- ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம் – பரிசோதனை கட்டணம் குறைப்பு!!

மேலும் குரூப் 2 ஏ-வில் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் பிப்ரவரி மாதம் அறிவிப்புகள் வெளியான பிறகு இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகிய நிலைகள் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இத்தேர்வில் கலந்து கொள்வதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

Vijay TV Big Boss Promo || மீண்டும் முட்டி கொள்ளும் பிரியங்கா & நிரூப் – சண்டைக்களமான பிக் பாஸ் வீடு!

மேலும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நகராட்சி ஆணையர், சார் பதிவாளர், வருவாய் உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளைநிலை வேலைவாய்ப்பு அலுவலர், டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அதிகாரி, உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகிய பணிகளில் பணிபுரியலாம். இதில் நகராட்சி ஆணையர் பணியில் சேர்ந்த 25 ஆண்டுகளில் மாவட்ட ஆட்சியர் பதவியை கூட பெறலாம். அத்துடன் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ- க்கான மாத சம்பளம் Level 11 முதல் Level 18 வரை வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!