IRCTC அறிமுகம் செய்துள்ள சிறந்த தமிழக சுற்றுலா Package – முழு விவரங்கள் இதோ!

0
IRCTC அறிமுகம் செய்துள்ள சிறந்த தமிழக சுற்றுலா Package - முழு விவரங்கள் இதோ!
IRCTC அறிமுகம் செய்துள்ள சிறந்த தமிழக சுற்றுலா Package - முழு விவரங்கள் இதோ!
IRCTC அறிமுகம் செய்துள்ள சிறந்த தமிழக சுற்றுலா Package – முழு விவரங்கள் இதோ!

ஐஆர்சிடிசி நிறுவனம் தற்போது சிறந்த சுற்றுலா பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது. 7 இரவுகள் மற்றும் 8 பகல் அடங்கிய இந்த பேக்கேஜ்ஜில் பயணம் செய்ய விரும்புபவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் படி முன்பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பேக்கேஜ்:

இந்திய ரயில் நிறுவனத்திற்கு சொந்தமான ஐஆர்சிடிசி தற்போது சிறந்த சுற்றுலா பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ள ராமேஸ்வரம், மதுரை மற்றும் கேரளா டூர் பேக்கேஜ்ஜில் கன்னியாகுமரி, கொச்சி, குமரகம், மதுரை, மூணாறு, ராமேஸ்வரம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற இடங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், இந்த பேக்கேஜ்ஜில் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் அடங்கும்.

மேலும், 7 இரவுகள் மற்றும் 8 பகல் அடங்கிய இந்த சுற்றுலா பேக்கேஜ்ஜில் காலை உணவு, இரவு உணவு, ஹோட்டலில் தங்கும் வசதி மற்றும் பயணம் செய்யும் வசதி உள்ளிட்ட அனைத்து செலவுகளும் இந்த ஒரே பேக்கேஜ்ஜில் அடங்கிவிடும். இது மட்டுமல்லாமல் சுற்றுலா பேக்கேஜ்ஜில் நட்சத்திர ஹோட்டலில் ஏசி அறைகள் அல்லது நட்சத்திர ஹோட்டல் அளவுக்கு சிறந்த ஹோட்டல்கள், ஏசி வாகனங்கள் மூலமாக விமான நிலையத்திற்கு கூட்டி செல்லுதல் மற்றும் பயணத் திட்டத்தின்படி அனைத்து இடங்களையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சுற்றிப் பார்ப்பது ஆகிய அனைத்தும் அடங்கும்.

EPFO கணக்கு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை அறிவிப்பு – முக்கிய தகவல் வெளியீடு!

மேலும், இந்த சுற்றுலா பேக்கேஜ் ஒரு நபருக்கு ரூ.49,550 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐஆர்சிடிசியின் இந்த பேக்கேஜ் 12 செப்டம்பர், 12 அக்டோபர், 7 நவம்பர், 19 டிசம்பர் மற்றும் 26 டிசம்பர் 2022 மற்றும் ஜனவரி 16 2023 மற்றும் 16 பிப்ரவரி 2023 வரைக்கும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள பயணிகள் IRCTC யின் அதிகாரபூர்வமான சுற்றுலா இணையதள முகவரியான www.irctctourism.com என்கிற பக்கத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், IRCTC சுற்றுலா வசதி மையம், மண்டல அலுவலகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மூலமாகவும் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!