SBI வங்கியில் மூத்த குடிமக்களுக்கான சூப்பர் திட்டம் அறிமுகம் – முழு விவரங்கள் இதோ!

0
SBI வங்கியில் மூத்த குடிமக்களுக்கான சூப்பர் திட்டம் அறிமுகம் - முழு விவரங்கள் இதோ!
SBI வங்கியில் மூத்த குடிமக்களுக்கான சூப்பர் திட்டம் அறிமுகம் - முழு விவரங்கள் இதோ!
SBI வங்கியில் மூத்த குடிமக்களுக்கான சூப்பர் திட்டம் அறிமுகம் – முழு விவரங்கள் இதோ!

SBI வங்கியில் மூத்த குடிமக்களுக்கான டெர்ம் டெபாசிட் திட்டம் என்கிற ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வட்டி விகிதங்கள் குறித்த முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி:

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பான நலத்திட்ட உதவிகளை அறிமுகம் செய்தபடி இருந்து வருகிறது. இதனிடையே, SBI வங்கி சில குறிப்பிட்ட தவணைகளுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதத்தை உயர்த்தியது. இந்த புதிய வட்டி விகிதம் ஆகஸ்ட் 13 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கியும் SBI வங்கியின் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது.

இதனால், SBI வங்கியின் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி பாரத ஸ்டேட் வங்கி (SBI) உத்சவ் டெபாசிட் என்கிற தனித்துவமான டெர்ம் டெபாசிட் திட்டம் என்கிற ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு மட்டும் கிடைக்கும்படியான அதிக வட்டி விகிதங்களை அறிமுகம் செய்திருக்கிறது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை? முதல்வர் ஆலோசனை!

அதாவது, இந்த உத்சவ் டெபாசிட் திட்டம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 15 முதல் கிட்டத்தட்ட 75 நாட்களுக்கு SBI உத்சவ் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்சவ் டெபாசிட் திட்டத்தில் 1000 நாட்களுக்கான நிலையான வைப்புத் திட்டங்களுக்கு 6.10% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 6.60% வட்டியும் வழங்கப்படுகிறது. அதாவது, 1000 நாட்களுக்கான ஃபிக்சட் டெபாசிட்டில் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50% வட்டியும் வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!