இன்று உலக சைக்கிள் தினம் – சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள் இதோ!!

0
இன்று உலக சைக்கிள் தினம் - சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள் இதோ!!
இன்று உலக சைக்கிள் தினம் - சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள் இதோ!!
இன்று உலக சைக்கிள் தினம் – சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள் இதோ!!

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மக்களின் போக்குவரத்து முறையாக இருந்த மிதிவண்டியின் தனித்தன்மை, நீண்ட ஆயுள் மற்றும் பலவகை நன்மை ஆகியவற்றை அங்கீகரிக்கும் விதமாக உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக சைக்கிள் தினம்:

சைக்கிள் ஓட்டுதல் என்பது போக்குவரத்து முறையாக மட்டுமல்லாமல் சைக்கிள் ஓட்டுதலை ஒரு வழக்கமான செயல்பாடாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முறையாகவும், சைக்கிள் ஓட்டுதலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, ஜூன் 3 ஐ உலக சைக்கிள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடுகிறது.

2021ம் ஆண்டின் உலக சைக்கிள் தினமான இன்று தினமும் சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள் குறித்து கீழே காண்போம்.

TN Job “FB  Group” Join Now

ssc

இருதய ஆரோக்கியம்:

பல ஆரோக்ய வல்லுநர்கள் சைக்கிள் ஓட்டுதலை ஒரு வழக்கமான செயலாக எடுத்துக்கொள்வது நமது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கடுமையான இருதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் என்று கூறுகிறார்கள். வழக்கமான உடற்பயிற்சியாக சைக்கிள் ஓட்டுவதும் உங்கள் இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். உயர் இரத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம் இதய தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்று Medicalnewstoday கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு சைக்கிள் பயிற்சி மிகவும் நல்ல விருப்பமாக இருக்கும்.

மின்சார வாகனங்களுக்கு பதிவு, புதுப்பித்தல் கட்டண விலக்கு – மத்திய அமைச்சகம்!!

கால்களின் வலிமை:

தினமும் சைக்கிள் ஓடுவதால் நமது உடம்பின் ஒட்டுமொத்த கீழ் பகுதியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. கால் தசைகள் அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. இதனால் நமது உடம்பில் குவாட்ஸ், க்ளூட்ஸ், ஹாம்ஸ்ட்ரிங்ஸ் போன்றவற்றில் நல்ல முறையிலான மாற்றங்கள் ஏற்படுகிறது.

நுரையீரல் ஆரோக்கியம்:

சைக்கிள் ஓட்டும் போது, நுரையீரல் தொடர்ந்து புதிய ஆக்ஸிஜனை இழுக்கும். ஆரோக்கியமான நுரையீரல் அதிக ஆக்ஸிஜன் நிறைந்த காற்றை உறிஞ்சும் போது நுரையீரல் முழுவதும் அதிக காற்று இருக்கும். தினமும் சைக்கிள் ஓடுவதால் நமது நுரையீரலின் ஆரோக்கியம் மேம்படும்.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – நாளை ஆலோசனை!!

மன ஆரோக்கியம்:

தினமும் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நமது மன அழுத்தம், மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற பிரச்சனைகள் குறையும். சைக்கிள் போடுவதன் மூலம் நமது கவனம் ஒருங்கினைக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!