TCS நிறுவனத்தில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு – ION தேர்வு தகுதி, விண்ணப்ப விவரங்கள் இதோ!

0
TCS நிறுவனத்தில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு - ION தேர்வு தகுதி, விண்ணப்ப விவரங்கள் இதோ!
TCS நிறுவனத்தில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு - ION தேர்வு தகுதி, விண்ணப்ப விவரங்கள் இதோ!
TCS நிறுவனத்தில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு – ION தேர்வு தகுதி, விண்ணப்ப விவரங்கள் இதோ!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டண்சி சர்வீஸ் (TCS) இந்த நிதியாண்டில் 40,000 க்கும் மேற்பட்ட புதிய ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தற்போது துவங்கியுள்ளது.

புதிய பணியமர்த்தல்

TCS நிறுவனம் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் 2021-22 ஆம் நிதியாண்டில் சுமார் 40 ஆயிரம் புதிய ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 30 முதல் நடைபெறவுள்ள தேசிய தகுதித் தேர்வு (NQT) அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அந்த வகையில் NQT தேர்வில் எடுத்த எந்தவொரு மதிப்பெண்களுடனும் விண்ணப்பதாரர்கள் புதிய பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 38,667 பேருக்கு கொரோனா – 478 பேர் உயிரிழப்பு!

இந்த தகுதி தேர்வு 2 ஆண்டுகள் மட்டும் செல்லுபடியாகும் எனவும் புதிய பணியமர்த்தலின் போது விண்ணப்பதாரரின் வாய்மொழி, எண் மற்றும் பகுத்தறிவு திறன்களின் அறிவாற்றல் திறன், பணியிடத்தில் ஆளுமைப் பண்புகள் மற்றும் மனநிலையை மதிப்பிடுவதற்கான சுயவிவரம், தொழில் விழிப்புணர்வு அதாவது தொழில் சார்ந்த பரிமாணங்களைப் புரிந்துகொள்வது, தொழில்துறையுடன் தொடர்புடைய விஷயங்களில் நிபுணத்துவம் ஆகியவற்றையும் இந்நிறுவனம் மதிப்பீடு செய்கிறது.

இந்த தேர்வானது புதிய ஊழியர்கள் அல்லது 2 வருடங்களுக்கும் குறைவான பணி அனுபவம் உள்ளவர்களுக்கானதாகும். NQT மதிப்பெண்கள், தொழில் NQT மற்றும் பொருள் NQT ஆகியவற்றிற்கு பதிவு செய்ய கட்டாயமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த புதிய பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் இறுதியாண்டு UG அல்லது PG மற்றும் டிப்ளமோ படித்துள்ள மாணவர்கள், 2 வருடங்களுக்கும் குறைவான அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்கலாம்.

ஆகஸ்ட் 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!

இந்த தகுதி உடையவர்கள் https://learning.tcsionhub.in/hub/national-qualifier-test/ என்ற இணையதளம் மூலம் அவர்களது விண்ணப்பங்களை செலுத்தலாம். இதை தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 30 முதல் நடைபெறும். தேர்வுக்கான பதிவுகளை முடிக்க ஆகஸ்ட் 15 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இத்தேர்வை ஆன்லைன் மூலம் அல்லது TCS iON ஆல் அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களில் எழுதிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!