ரேஷன் கார்டை தொலைத்து விட்டீர்களா? பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ!

0
ரேஷன் கார்டை தொலைத்து விட்டீர்களா? பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ!
ரேஷன் கார்டை தொலைத்து விட்டீர்களா? பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ!
ரேஷன் கார்டை தொலைத்து விட்டீர்களா? பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ!

தமிழக ரேஷன் கடைகளில் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. இப்போது நீங்கள் தவறுதலாக ரேஷன் கார்டை தொலைத்து விட்டால் சுலபமாக ஆன்லைன் முறையில் பதிவு செய்து புதிய ரேஷன் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.

ரேஷன் பொருட்கள்:

தமிழகத்தில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் தற்போது “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு”, என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை எளிதாக பெற முடியும். இத்திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தற்போது அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அத்துடன் ரேஷன் கார்டு மூலமாக மட்டுமே உணவு பொருட்களை பெற முடியும். புதிதாக ரேஷன் கார்டு பெற நினைப்பவர்கள் விண்ணப்பித்த பிறகு அரசு அதிகாரிகள் அவர்களின் வீட்டுக்கு வந்து தகவல்களை, இருப்பிடங்களை உறுதி செய்வார். இதில் ஏதேனும் தவறு இருப்பின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதன் பின்னர் 3 அல்லது 5 மாதங்களுக்கு பிறகு ரேஷன் கார்டு விநியோகம் செய்யப்படும். இப்போது ரேஷன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நீங்கள் தவறுதலாக ரேஷன் கார்டை தொலைத்து விட்டால் அதனை பதிவு செய்து மீண்டும் ரேஷன் கார்டை பெற முடியும்.

முத்து திரைப்பட கதையை காப்பியடித்ததால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட வேலைக்காரன் சீரியல் – ரசிகர்கள் ஷாக்!

தொலைந்த ரேஷன் கார்டை பெறுவதற்கான வழிமுறைகள்

1. இதற்கு முதலாவதாக https://www.tnpds.gov.in/ என்ற தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இப்போது தங்களின் பயனாளர் IDஐ உள்ளிட வேண்டும். இப்போது பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.

3. அடுத்ததாக OTP எண்ணை உள்ளிட்டு சுயவிவர பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

4. இப்போது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கம் திரையில் காண்பிக்கப்படும்.

5. இதையடுத்து இதில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு அந்த காப்பியை PDF ஆக சேமிக்க வேண்டும்.அல்லது டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

6. அதனை பிரிண்ட் போட்டு, நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தங்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here